
மிஷ்கின் இயக்கிய ‘முகமுடி’ திரைப்படம் மூலம் தமிழ் சினிமா ரசிகர்களிடம் அறிமுகமானவர் பூஜா ஹெக்டே. ஆனால், அப்படம் தோல்வி அடைந்ததால் தமிழ் சினிமாவே வேண்டாம என தெலுங்கு சினிமா பக்கம் ஒதுங்கினார். அங்கு கொஞ்சம் கொஞ்சமாக உயர்ந்து தற்போது முன்னணி நடிகையாக மாறியுள்ளார். இதையடுத்து தமிழில் விஜய் நடிக்கும் பீஸ்டர் படத்தில் கதாநாயகியாக நடித்து வருகிறார்.

இந்நிலையில், ஒரு முக்கிய தகவலை வெளியிட்டுள்ளார். கொரோனா காலத்தில் ‘Alla about love’ என்கிற அறக்கட்டளையை துவங்கி இருப்பதாகவும், அதன் மூலம் பல நூற்றுக்கணக்கான நலிந்த குடும்பங்களுக்கு பொருளாதார ரீதியாக உதவியிருக்கிறோம். தற்போது மருத்துவ வசதிகள் மற்றும் ரேஷன் பொருட்களை கொடுத்து வருகிறோம். இதுபற்றி தற்போது பகிர்ந்து கொள்ளவிரும்புவதாக அவர் தெரிவித்தார்.
இதையடுத்து, ரசிகர்களும், திரையுலகினரும் அவரை பாராட்டி வருகின்றனர்.





