Connect with us

Cinema News

ஒரு போன்ல சிம்புவை ஓகே பண்ணிட்டேன்… மேடையில் உளறி கொட்டிய புஸுபுஸு நடிகை…

நடிகை ஹன்சிகா மோத்வானியின் 50 திரைப்படமாக உருவாகியுள்ள திரைப்படம் “மஹா”. இப்படத்தை இயக்குனர் யு.ஆர்.ஜமீல் இயக்க, நடிகர் சிலம்பரசன் சிறப்பு தோற்றத்தில் நடித்துள்ளார். கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பே இந்த படம் ரிலீஸ் ஆக விருந்து.

ஒரு சில காரணங்களால், ரிலீஸ் -ஆகாமல் இருக்கிறது. இறுதியாக படம் வரும் ஜூலை 22-ஆம் தேதி வெளியாகும் என அறிவிக்கப்பட்டுவிட்டது. படத்தில் ரேஷ்மா பசுபதி, சனம் ஷெட்டி, தம்பி ராமையா, உள்ளிட்ட பல பிரபலங்கள் முக்கியமான கதாபாத்திரத்திலும் நடித்துள்ளார்கள். படத்திற்கு இசையமைப்பாளர் ஜிப்ரான் இசையமைத்துள்ளார்.

இந்த படத்திற்கான இசை வெளியீட்டு விழா நேற்று சென்னையில் நடைபெற்றது. அதில், கலந்து கொண்டு பேசிய ஹன்ஷிகா சிம்பு குறித்து பேசியுள்ளார்.

இதையும் படியுங்களேன்- அந்த சீன்ல ரோலக்ஸ் சூர்யாவாக சிம்பு வருவார்… கொஞ்சம் ஓவராக பேசிய தேசிய விருது நடிகர்.!

மஹா திரைப்படத்தில் நடிக்க வாய்ப்பு வந்தபோது இது எனது 50-ஆவது படம் என்று நான் நினைக்கவில்லை. என் 50-ஆவது படமாக மஹா திரைப்படம் அமைந்ததில் நான் மிகவும் மகிழ்ச்சியாக இருக்கிறேன்.

சிம்புவிற்கு “மஹா” படத்தில் நடிப்பதற்காக ஒரே ஒரு கால் தான் செய்தேன். அவர் உடனே சம்மதம் தெரிவித்து நடித்துக் கொடுத்தார். அவர் இந்தத் திரைப்படத்தில் நடித்ததற்காக அவருக்கு நான் கடமைப்பட்டுள்ளேன். அவருக்கும் மிகவும் நன்றி” என தெரிவித்துள்ளார்.

google news
Continue Reading

More in Cinema News

To Top