
வாணி ராணி உள்ளிட்ட பல தொலைக்காட்சி தொடர்களில் நடித்து சின்னத்திரை ரசிகர்களிடம் பிரபலமானவர் வேணு அரவிந்த். பாலச்சந்தர் இயக்கிய காதல் பகடை, கசளவு நேசம், காதல் வாங்கி வந்தேன் ஆகிய சீரியல்கள் இவரை ரசிகர்களிடம் பிரபலப்படுத்தியது. மேலும், நரசிம்மா உள்ளிட்ட சில திரைப்படங்களில் நடித்துள்ளார். அதிகமாக போலீஸ் கதாபாத்திரத்தில் நடித்தவர்.

சென்னையில் உள்ள ஒரு தனியார் மருத்துவமனயில் தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்டுள்ளர். கொரோனாவல் பாதிக்கப்பட்டு சிகிச்சையில் மீண்ட இவருக்கு நிமோனியா பாதிப்பு எற்பட்டது. மூளையில் கட்டி வந்து அறுவை சிகிச்சை செய்யப்பட்டது. அப்போது, அவர் கோமா நிலைக்கு சென்றதாக கூறப்படுகிறது. எனவே, சின்னத்திரை நடிகர்கள் பலரும் வேணு அரவிந்த் குணமடையை பிரார்த்தனை செய்வதாக சமூக வலைத்தளங்களில் பதிவிட்டு வந்தனர்.
இந்நிலையில், தற்போது அவருக்கு நினைவு திரும்பிவிட்டதாக செய்திகள் வெளிவந்துள்ளது. இந்த செய்தி சின்னத்திரையினருக்கு மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.





