ஹரியின் பக்கா மாஸ்டர் ப்ளான்…! காத்திருந்து வேட்டையாடிய சம்பவம்…

Published on: July 15, 2022
hari_main_cine
---Advertisement---

தமிழ் சினிமாவில் கிட்டதட்ட 20 வருடங்களாக கோலோச்சி வருபவர் இயக்குனர் ஹரி. பிரசாந்த் நடிப்பில் உருவான
தமிழ் என்ற படத்தின் மூலம் இயக்குனராக அறிமுகமானார் ஹரி. தொடர்ந்து விறு விறுப்பான படங்களை கொடுத்து மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பை கொடுத்தார்.

hari1_cine

விஷால், சிம்பு, சூர்யா, விக்ரம் போன்ற முன்னனி நடிகர்களுடன் வெற்றிப்படங்களை கொடுத்து அவர்களை புகழின் உச்சத்திற்கு கொண்டு சென்ற பெருமை ஹரியை சேரும். சூர்யாவுடன் வேல், ஆறு, சிங்கம் போன்ற படங்களை கொடுத்தார். சிங்கம் படத்தின் வெற்றியை தொடர்ந்து சிங்கம்-2, சிங்கம்-3 படங்களை எடுத்தார்.

hari2_cine

ஆனால் அந்த படங்கள் எதிர்பார்த்த வெற்றியை பெறவில்லை. இதனால் படவாய்ப்புகள் இல்லாமல் இருந்து ஹரிக்கு தயாரிப்பாளர்கள் முன்வரவில்லை. இதை அறிந்த சூர்யா தன்னுடைய சொந்த தயாரிப்பு நிறுவனமான 2டி நிறுவனத்திற்கு ஒரு படம் பண்ணி தரவேண்டும் என கேட்டுக் கொண்டதற்கிணங்க அருவா படம் ஆரம்பமானது.

hari3_cine

இதற்கிடையில் விக்ரமை வைத்து சாமி-2 படத்தை எடுத்து அதுவும் அட்டர் பிளாப் ஆனதால் இதையெல்லாம் கவனித்துக் கொண்டிருந்த சூர்யா அருவா படத்தை கொஞ்சம் தள்ளி வைத்தார். இதனால் எந்த படமும் இல்லாத ஹரிக்கு மற்ற நடிகர்கள் வர தயங்கினர். ஆனால் ஹரி இது தான் சமயம் என தன் சொந்த மச்சானாகிய அருண்விஜயை வைத்து யானை என்ற படத்தை எடுத்து பிரம்மாண்டமாக்கினார். படமும் வெற்றிகரமாக ஓடிக்கொண்டிருக்கிறது. இதன் மூலம் சூர்யா திரும்பவும் வந்து ஹரியிடம் சரணடைந்துள்ளதாக தெரிகிறது.

Rohini

முருகன், சினிரிப்போர்டஸ் தமிழ் இணையதளத்தில் கடந்த 8 ஆண்டுகளாக பணியாற்றி வருகிறார். ஊடகத்துறையில் 10 ஆண்டுகளுக்கு மேல் அனுபவம் கொண்டவர். இளங்கலை பட்டதாரியான இவர், வெப்துனியா தமிழ் இணையதளத்தில் 2016 ஆம் ஆண்டு பணியைத் தொடங்கினார். இந்த தளத்தில் சினிமா செய்திகளை வழங்கி வருகிறார். மேலும் இணையதள செய்தி ஆசிரியராகவும் பணியாற்றி வருகிறார்.