பார்த்தவர்களை எல்லாம் கத்தியால் குத்திய மர்ம மனிதன்… போலிஸார் எடுத்த உடனடி நடவடிக்கை!

Published on: February 3, 2020
---Advertisement---

9e35e816585b722d64fbc5f0b4361265

லண்டனில் கையில் கத்தியுடன் திரிந்த நபர் ஒருவர் தன் கண்ணில் பட்டவர்களை எல்லாம் கத்தியால் குத்திய சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

இங்கிலாந்து தலைநகர் லண்டனில் நேற்று ஒரு பரபரப்பான சம்பவம் நடந்துள்ளது. லண்டனின் ஒரு வீதியில் கையில் கத்தியுடன் நின்று கொண்டிருந்த ஒரு மனிதர் சாலையில் செல்பவர்களை எல்லாம் கத்தியால் குத்தியுள்ளார். இதனால் பலர் படுகாயமடைந்தனர்.

இதையடுத்து சம்பவ இடத்துக்கு விரைந்த ஸ்காட்லாந்து போலிஸார் அந்த நபரை சுட்டுக்கொலை செய்தனர். இதையடுத்து அவர் யார் என்பது குறித்து விசாரணை நடைபெற்று வருகிறது. கத்தியால் குத்தப்பட்டவர்கள் அனைவரும் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். சுட்டுக்கொல்லப்பட்ட நபர் தீவிரவாதிகளுடன் தொடர்பு உள்ளவர் என சந்தேகிக்கப்படுகிறது.

Leave a Comment