
பிக்பாஸ் நிகழ்ச்சி மூலம் தமிழ் மக்களுக்கு நன்கு பரீட்சயமானவர் நடிகை யாஷிகா. இருட்டு அறையில் முரட்டுக்குத்து, நோட்டா, ஜாம்பி உள்ளிட்ட சில திரைப்படங்களில் நடித்துள்ளார். நிறைய போட்டோ ஷுட், படங்கள் கமிட்டாவது என பிஸியாக இருந்த அவர் அண்மையில் கார் விபத்தில் சிக்கினார்
அந்த விபத்தில் அவருடன் பயணம் செய்த அவரது தோழி பவானி சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். அடுத்தடுத்து 2, 3 சர்ஜரி செய்த பிறகு யாஷிகா தற்போது உடல் நலம் தேறி வருகிறார். அவர் நார்மல் வார்டுக்கு மாறிவிட்டார் எனவும், வீட்டிற்கு சென்றுவிட்டார் எனவும் செய்திகள் மாறி மாறி வெளிவந்து கொண்டிருக்கிறது.

இந்நிலையில், இந்த விபத்து பற்றி தனது இன்ஸ்டாகிராமில் ‘நான் என்ன உணர்கிறேன் என்பதை கூற முடியவில்லை. உயிர் வாழவே குற்ற உணர்ச்சியாக இருக்கிறது. அந்த விபத்திலிருந்து என்னை காப்பாற்றியதற்காக கடவுளிடம் நன்றி சொல்வதா இல்லை என் நெருங்கிய தோழியை என்னிடமிருந்து பிரித்த கடவுளை குறை சொல்வதா என தெரியவில்லை. உன்னை நான் மிகவும் மிஸ் செய்கிறேன் பவானி. எனக்கு தெரியும் நீ என்னை மன்னிக்கவே மாட்டாய். உன் குடும்பத்திற்கு கடினமான சூழ்நிலையை உருவாக்கி விட்டேன். உன் ஆத்மா அமைதி கொள்ளட்டும். நீ என்னிடம் திரும்பி வர பிரார்த்தனை செய்கிறேன். என்றோ ஒரு நாள் உன் குடும்பம் என்னை மன்னிப்பார்கள்’ என உருக்கமாக பதிவிட்டிருந்தார்.

தற்போது அவரின் உடல் நிலைபற்றி பதிவிட்டுள்ள அவர் ‘ என் இடுப்பு பகுதி எழும்புகளில் பல முறிவுகள். என் வலது காலில் முறிவு. அறுவை சிகிச்சைக்கு பின் ஓய்வு எடுத்து வருகிறேன். அடுத்த 5 மாதங்களுக்கு என்னால் நடக்கவோ, நிற்கவோ முடியாது. நாள் முழுவதும் பெட்டில்தன் படுத்திருக்கிறேன். அங்கேதான் மலம் கழிக்க வேண்டும். இடது புறமோ, வலுது புறமோ என்னால் அசைய முடியாது. என் பின்பகுதி முழுவதும் பாதிக்கப்பட்டுள்ளது. அதிர்ஷ்டவசமாக என் முகத்தில் எந்த காயமும் ஏற்படவில்லை. இது கண்டிப்பாக எனக்கு மறுபிறப்பு. ஆனால், இந்த மறுபிறப்பை நான் கேட்கவில்லை. மனரீதியாகவும், உடல்ரீதியாகவும் நான் காயமடைந்துள்ளேன். கடவுள் என்னை தண்டித்து விட்டார். ஆனால் நான் இழந்ததை ஒப்பிட்டால் இது ஒன்றுமில்லை. என்னை திட்டியவர்கள் தவிர்த்து, எனக்காக பிரார்த்தனை செய்தவர்களுக்கு நான் நன்றிக்கடன் பட்டுள்ளேன். உங்களின் அன்புக்கும், அக்கறைக்கும் நன்றி’ என பதிவிட்டுள்ளார்.






