
தமிழ் சினிமாவில் சைக்கோ உட்பட பல திரைப்படங்களை இயக்கியவர் மிஷ்கின். வித்தியாசமான கோணத்தில் கதை, திரைக்கதை அமைப்பதால் இவருக்கென தனி ரசிகர் கூட்டமே உண்டு. சைக்கோ திரைப்படத்திற்கு பின் இவர் யாரை இயக்கப்போகிறார் என்கிற எதிர்பார்ப்பு நீடித்து வந்த நிலையில், பிசாசு 2 திரைப்படத்தை அவர் துவங்கினார்.
இப்படத்தில் ஆண்ட்ரியா, நடிகை பூர்ணா உள்ளிட்ட பலரும் நடித்துள்ளனர். விஜய் சேதுபதி ஒரு சிறிய வேடத்தில் நடித்துள்ளார். இப்படத்தை ராக்போர்ட் எண்டர்டையின்மெண்ட் தயாரித்து வருகிறது. இப்படத்திற்கு கார்த்திக் ராஜா இசையமைத்து வருகிறார்.

இந்நிலையில், இப்படத்தின் ஃபர்ஸ்ட்லுக் போஸ்டரை மிஷ்கின் தனது டிவிட்டர் பக்கத்தில் வெளியிட்டுள்ளார். பேய் படம் என்பதால் பிசாசை காட்டி பயமுறுத்தியிருப்பார் என ஆவலோடு பார்த்தால் குளியல் தொட்டியில் ஒரு பெண் கையில் சிகரெட்டுடன் ஸ்டைலாக படுத்திருக்கும் காட்சி அந்த போஸ்டரில் இடம் பெற்றுள்ளது.
