அனிருத் இசை…அழகான 2 ஹீரோயின்கள்… தனுஷுக்கு மச்சம் உச்சத்துல இருக்கு!…

fc1ff375cb8e1bdb067052d64b4762ee-1

தமிழ் சினிமாவில் துள்ளுவதோ இளமை திரைப்படம் மூலம் அறிமுகமானவர் நடிகர் தனுஷ். அதன்பின் தனது திறமையான நடிப்பால் ரசிகர்களை கவர்ந்தவர். அசுரன் திரைப்படத்தில் அவரின் நடிப்பிற்கு தேசிய விருதும் கிடைத்தது. தற்போது கார்த்திக் நரேன் இயக்கத்தில் ஒரு புதிய படத்தில் நடித்து வருகிறார். இப்படத்தில் அவருக்கு ஜோடியாக மாளவிகா மோகனன் நடித்து வருகிறார். இந்த திரைப்படம் அவரின் 43வது திரைப்படம் என்பதால் D43 என அழைக்கப்பட்டு வருகிறது. 

f0e8271167a84b3770ceaf6b34fa577a-1

இந்நிலையில், தனுஷின் 44வது திரைப்படத்தை சன்பிக்சர்ஸ் நிறுவனம் தயாரிக்கவுள்ளது. இப்படத்தை மித்ரன் ஜவஹர் இயக்கவுள்ளார். இவர் தனுஷ்- நயன்தாராவை வைத்து ‘யாரடி நீ மோகினி’ படத்தை இயக்கியவர். அதன்பின் மீண்டும் தனுஷை வைத்து உத்தமபுத்திரன் படத்தை இயக்கினார். 

9e5938abdf33b2f76a785172699a20f4

இந்த புதிய படத்தில் இயக்குநர் இமயம் பாரதிராஜா, பிரகாஷ்ராஅஜ் ஆகியோர் நடிப்பது அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது. இப்படத்திற்கு அனிருத் இசையமைத்துள்ளார் என தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும், இப்படத்தில் நித்யா மேனன் மற்றும் ராஷி கண்னா என 2 கதாநாயகிகள் நடிக்கவுள்ளனர். 

92a964fa92f3cec751f9f3f4cc70e138

Categories Uncategorized

Leave a Comment