Connect with us

Cinema News

விஜயகாந்தை பார்த்து நடுங்கி உளறிய ரஜினிகாந்த்… எல்லாம் அந்த விஷயத்துக்காக தான்…

தமிழ் சினிமாவில் ஒரு காலத்தில் ரஜினிகாந்த், கமல்ஹாசனுக்கு இணையாக ரசிகர்கள் பட்டாளத்தை வைத்து இருந்தவர் கேப்டன் விஜயகாந்த். நடிகராக மட்டுமில்லாமல், இவர் நடிகர் சங்க தலைவராகவும் இருந்துள்ளார். திரையில் மட்டுமின்றி, நிஜ வாழ்க்கையிலும் அவரை பலர் ரியல் ஹீரோ என்று கூறுவது உண்டு.

அதற்கான காரணம் ஏனென்றால், உதவி என்று கேட்டல் உடனே செய்துவிடும் தங்க மணம் கொண்ட நல்ல மனிதர் இதனால் என்னவோ, இன்னும் அவருக்கு ரசிகர்கள் பட்டாளம் குறையவே இல்லை. விஜய் காந்திற்கு உடல் நிலை சரியில்லாத காரணத்தால் சினிமாவில் நடிக்காமல் இருக்கிறார். மீண்டும் அவர் சினிமாவில் நடிப்பாரா என பல ரசிகர்கள் ஆவலுடன் எதிர்பார்த்து காத்துள்ளனர்.

இந்த நிலையில், விஜய்காந்தை பற்றி பல நடிகர்கள், நடிகைகள் பெருமையாக பேசுவது உண்டு அந்த வகையில், நடிகர் டெல்லி கணேஷ் ஒரு நேர்காணலில் பேசியுள்ளார்.

இதையும் படியுங்களேன்- ஐயோ மொத்த பணமும் போச்சே… விக்னேஷ் சிவன் செய்த வேலையால் பதட்டத்தில் நயன்தாரா….

எப்போதுமே அவர் நடந்து வந்தாலே மெதுவாக நடந்து வரமாட்டார். புலி மாதிரி தான் கட .. கட-னு வேகமாக தான் நடந்து வருவார். பாபா படத்தின் படப்பிடிப்பு விறு விறுப்பாக நடந்து கொண்டு இருந்தது. நான் ரஜினி சார் எல்லாம் சிவாஜி கார்டானில் இருந்தோம். அப்போ ஒரு பெரிய கார் வந்தது, அதிலிருந்து ஒரு 10 பேருடன் விஜய்காந்த் யாரையோ அடிக்க வற மாதிரி இருந்தது. அதனை பார்த்து ரஜினி பயந்து.. யாரு..? என்னது என நடுங்கி உளறிவிட்டார்.

அப்புறம் தான் விஜய்காந்த் சிங்கப்பூரில் நடக்கும் நடிகர் சங்க நிகழ்ச்சிக்கு நீங்க வரணும், கமல் வரணு சொல்லிட்டாரு என சொன்னார். அதற்கு ரஜினி நான் வரேன் என பதட்டத்துடன் சொன்னார். அவர் ஒரு தடவை தான் வாங்க சொன்னார் ஆனா ரஜினி 100 தடவை வரேன் என்று சொல்லிவிட்டார்” என டெல்லி கணேஷ் ஒரு நேர்காணலில் தெரிவித்துள்ளார். இதனை பார்த்த ரசிகர்கள் ஒரு காலத்தில் எப்படி இருந்த மனுஷன் விஜய்காந்த் இப்போ இப்படி ஆயிட்டாரே என வருத்தப்பட்டு வருகிறார்கள்.

author avatar
Manikandan
Continue Reading

More in Cinema News

To Top