
தமிழ் சினிமாவில் பொற்காலம், வெற்றிக்கொடி கட்டு, ஆட்டோகிராப், தவமாய் தவமிருந்து போன்ற சிறப்பான திரைப்படங்களை இயக்கியவர் சேரன். பிக்பாஸ் நிகழ்ச்சியிலும் அவர் கலந்து கொண்டார். தற்போது முழு நேர நடிகராக மாறிவிட்டார்.
நந்த பெரியசாமி இயக்கும் ‘ஆனந்தம் விளையாடும் வீடு’ திரைப்படத்தில் அவர் நடித்து வருகிறார். இந்த படப்பிடிப்பு திண்டுக்கல்லில் நடைபெற்று வருகிறது. இந்த திரைப்படத்தில் ஒரு வீடு பிரதான இடம் பெறுகிறது. அந்த வீட்டில் படப்பிடிப்பு நடைபெற்றபோது, கால் இடறி சேரன் கீழே விழந்தார். இதில் அவரின் தலையில் காயம் ஏற்பட்டு ரத்தம் வழிந்தது.
எனவே, உடனடியாக அவர் அருகிலிருந்த மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டார். அங்கு அவருக்கு தலையில் 8 தையல் போடப்பட்டது. ஆனாலும், ஓய்வு எடுக்காமால் அவர் படப்பிடிப்பில் கலந்து கொண்டு நடித்து கொடுத்துள்ளார்.