விவேக்கின் கடைசி நிகழ்ச்சி எதில் ரிலீஸ் தெரியுமா?…

c3c629260fab1a255b37694b408c218f

சின்ன கலைவாணர் என அழைக்கப்படும் நடிகர் விவேக் திடீரென ஏற்பட்ட மாரடைப்பால் கடந்த ஏப்ரல் மாதம் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டார். அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்ட நிலையில், சிகிச்சை பலனின்றி அவர் மரணமடைந்தார். அவரின் மரணம் திரையுலகினர் மட்டுமின்றி ரசிகர்களுக்கும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது.

இந்நிலையில், அவரின் கடைசி நிகழ்ச்சி ‘LOL: எங்க சிரி பாப்போம்’ நிகழ்ச்சி அமேசான் பிரைமில் விரைவில் வெளியாகவுள்ளது. 10 காமென்கள் கலந்து கொண்ட  இந்த நிகழ்ச்சியை மிர்ச்சி சிவாவும், விவேக்கும் நடத்தியுள்ளனர். திரைப்படங்கள் மற்றும் வெப் சீரியஸ்கள் மட்டுமே ஓடிடி- தளங்களில் வெளியாகி வந்த நிலையில், தற்போது டிவி நிகழ்ச்சிகள் மற்றும் ரியாலிட்டி ஷோக்களும் ஓடிடியில் வெளியாக துவங்கியுள்ளது.  ‘LOL: எங்க சிரி பாப்போம் நிகழ்ச்சி  அமேசான் பிரைமில் ஆகஸ்டு 27ம் தேதி வெளியாகவுள்ளது.

 

Categories Uncategorized

Leave a Comment