புதுப்பொண்ணு நயன்தாராவுக்காக காத்திருக்கும் வளரும் நடிகர்… கொஞ்சம் கருணை காட்டுங்க லேடி சூப்பர்ஸ்டார்..

Published on: July 21, 2022
---Advertisement---

நடிகை நயன்தாரா இயக்குனர் விக்னேஷ் சிவன் இருவரும் கடந்த மாதம் திருமணம் செய்துகொண்டார். கடந்த ஜூன் 9 -ஆம் இவர்களது திருமணம் கடந்த தேதி கோலாகலமாக சென்னையில் நடைபெற்றது. திருமணம் முடிந்த கையோடு தேனிலவுக்காக தாய்லாந்த் போன்ற நாடுகளுக்கு சென்றார்கள்.

nayan

அதற்கான புகைப்படங்களும் இணையத்தில் வைரலாகி வந்தது. இப்போது மீண்டும் தான் கமிட் ஆகியுள்ள படங்களில் நடிக்க கவனம் செலுத்தி வருகிறார். அதன்படி, ஜெயம் ரவிக்கு ஜோடியாக இறைவன், ஷாருக்கானுக்கு ஜோடியாக ஜவான் ஆகிய படங்களில் நடித்து வருகிறார்.

இதில் இறைவன் படத்தை இயக்குனர் அஹமத் இயக்குகிறார். இந்த படத்தில் ஜெயம் ரவிக்கு ஜோடியாக நயன்தாரா நடிக்கவுள்ளார். படத்தில் ஜெயம் ரவிக்கான அனைத்து காட்சிகளும் படமாக்கபட்டுவிட்டதாம். நயன்தாராவுடைய காட்சிகள் மட்டுமே படமாக்கவுள்ளார்களாம்.

இதையும் படியுங்களேன்- பிக் பாஸ் சினேகனுக்காக கேப்டன் இறங்கி செய்த செயல்… அவரே கண்கலங்கி கூறிய சூப்பரான செய்தி…

ஆனால், நயன்தாரா தற்போது அட்லீ இயக்கத்தில் உருவாகி வரும் ஜவான் படத்தில் நடித்து வருகிறார். இதனால் அங்கு படப்பிடிப்பை முடித்துவிட்டு இறைவன் படத்தில் நடிக்க எப்போது வருவார் என படக்குழுவினர் காத்துள்ளார்களாம். இதனால் கருணை காட்டி விரைவில் நயன்தாரா இறைவன் படப்பிடிப்பில் இணைவாரா இல்லையா என்பதை பொறுத்திருந்து பார்ப்போம்.

Manikandan

முருகன், சினிரிப்போர்டஸ் தமிழ் இணையதளத்தில் கடந்த 8 ஆண்டுகளாக பணியாற்றி வருகிறார். ஊடகத்துறையில் 10 ஆண்டுகளுக்கு மேல் அனுபவம் கொண்டவர். இளங்கலை பட்டதாரியான இவர், வெப்துனியா தமிழ் இணையதளத்தில் 2016 ஆம் ஆண்டு பணியைத் தொடங்கினார். இந்த தளத்தில் சினிமா செய்திகளை வழங்கி வருகிறார். மேலும் இணையதள செய்தி ஆசிரியராகவும் பணியாற்றி வருகிறார்.