மக்களிடம் பிரபலமாக உதயநிதி ஸ்டாலின் மனைவி என்னவெல்லாம் செய்றாங்க பாருங்க…

Published on: July 21, 2022
---Advertisement---

நடிகர், தயாரிப்பாளர், அரசியல் பிரமுகருமான உதயநிதி ஸ்டாலின் சினிமாவில் எவ்வளவு சுறுசுறுப்பாக இயங்கி வருகிறாரோ அதேபோல அவரது மனைவி கிருத்திகா உதயநிதியும் சினிமாவில் இயங்கி வருகிறார். இவர் இதற்கு முன்பு மிர்ச்சி சிவா நடித்த ‘வணக்கம் சென்னை’ விஜய் ஆண்டனி நடித்த ‘காளி’ போன்ற திரைப்படங்களை இயக்கியுள்ளார்.

 

தற்போது, இவர் அடுத்ததாக இயக்கியுள்ள திரைப்படம் ‘பேப்பர் ராக்கெட்’ இந்த திரைப்படத்தின் டிரைலர்  வெளியீட்டு விழா இன்று நடைபெறுகிறது. இப்படத்தின் பெயர் ‘பேப்பர் ராக்கெட்’ என்பதால் அதனை வித்தியாசமான முறையில் மக்களிடம் பிரபலப்படுத்த கிருத்திகா உதயநிதி புதிதாக ஒரு யோசனையை செய்துள்ளார்.

இதையும் படிங்களேன் – வீடியோ காலில் மாட்டிக்கொண்ட லோகேஷ் கனகராஜ்.! தளபதி விஜயுடன் மிரட்ட போகும் ‘அந்த’ நடிகர்.!?

 

அதாவது, இந்த டிரைலர்  வெளியீட்டு விழாவிற்கு வருவோர் அனைவர் கையிலும் பேப்பர் ராக்கெட் கொடுத்து அதனை, மேடைக்கு பறக்க விட்டு அதனை விளம்பரப்படுத்த ஏற்பாடு செய்துள்ளாராம்.

அந்த வகையில், இந்த விழாவிற்கு அழைப்பிதழ் கொடுக்க கிருத்திகா உலகநாயகன் கமல்ஹாசனை அணுகினாராம். ஆனால், கமல்ஹாசன் தற்போது மற்ற வேலைகள் பிசியாக இருப்பதால் இன்று இந்த நிகழ்ச்சியில் கலந்து கொள்ளவில்லை என கூறப்படுகிறது.

 

Manikandan

முருகன், சினிரிப்போர்டஸ் தமிழ் இணையதளத்தில் கடந்த 8 ஆண்டுகளாக பணியாற்றி வருகிறார். ஊடகத்துறையில் 10 ஆண்டுகளுக்கு மேல் அனுபவம் கொண்டவர். இளங்கலை பட்டதாரியான இவர், வெப்துனியா தமிழ் இணையதளத்தில் 2016 ஆம் ஆண்டு பணியைத் தொடங்கினார். இந்த தளத்தில் சினிமா செய்திகளை வழங்கி வருகிறார். மேலும் இணையதள செய்தி ஆசிரியராகவும் பணியாற்றி வருகிறார்.