Connect with us

Cinema News

ஏ.ஆர்.ரகுமான் மீது கடுப்பில் சியான் விக்ரம்.! நீங்க இப்படி செஞ்சிட்டிங்களே சார்.?!

இயக்குனர் அஜய் ஞானமுத்து இயக்கத்தில் சீயான் விக்ரம் நடித்த ‘கோப்ரா’ திரைப்படம் இந்த ஆண்டு மிகவும் எதிர்பார்க்கப்பட்ட படங்களில் ஒன்றாகும். இப்படத்தின் போஸ்ட் புரொடக்‌ஷன் பணிகள் விறுவிறுப்பாக நடந்து வருகிறது.

இந்த படம், ஆகஸ்ட் 11ஆம் தேதி உலகம் முழுவதும் வெளியாகும் என முன்னதாக அறிவிக்கப்பட்டிருந்த நிலையில், படத்தின் வெளியீடு தள்ளிப் போக வாய்ப்பு இருப்பதாக தெரிகிறது. லலித் குமாரின் 7 ஸ்கிரீன் தயாரிப்பில் தமிழ், தெலுங்கு, ஹிந்தி ஆகிய மொழிகளில் வெளியாகும் இப்படத்திற்கு ஏ.ஆர்.ரஹ்மான் இசையமைத்துள்ளார்.

அதாவது, இப்படம் தள்ளிப் போக காரணம் என்னெவென்றால் ஏ.ஆர்.ரஹ்மான் இப்படத்திற்கான பின்னணி இசையை இன்னும் அமைக்கவில்லையாம். அது, ஒரு பக்கம் இருக்க விக்ரமின் அடுத்த பிரம்மாண்ட படமான பொன்னியின் செல்வன் திரைப்படம் செப்டம்பர் 30 அன்று வெளியாகவுள்ளது. இந்நிலையில், இவர் எப்போ அந்த பின்னணி இசையை அமைத்து படத்தை வேளியிடுவது என்று படக்குழுவும் விக்ரமும் ஏ.ஆர்.ரகுமான் மீது கோபத்தில் இருப்பதாக கிசுகிசுக்கப்படுகிறது.

இதையும் படிங்களேன்  – நான் சிம்பு கூட படம் பண்றதுக்கு ஆப்பு வச்சிட்டான்.. விழா மேடையில் கோபப்பட்ட சர்ச்சை இயக்குனர்.!

அந்த வகையில், படம் வெளியாக தாமதமாகினால் செப்டம்பர் மாதத்திற்கு தள்ளப்படும் என்பதால் படம் சரியாக ஓடாது என்று சமூக வலைதளத்தில் கிசுகிசுக்கப்படுகிறது. இந்நிலையில், ஆகஸ்ட் 11 அன்று திரைக்கு வர திட்டமிடப்பட்ட படம், இப்போது ஆகஸ்ட் 31, 2022 அன்று வெளியிடப்படும் என கணிக்கப்பட்டுள்ளது. ஆனால், இது குறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகவில்லை. மேலும், முன்னாள் இந்திய கிரிக்கெட் வீரர் இர்பான் பதான் ‘கோப்ரா’ படத்தின் மூலம் நடிகராக அறிமுகமாக  இருக்கும் இப்படத்தில் விக்ரம் பல தோற்றங்களில் நடித்திருக்கிறார்.

author avatar
Manikandan
Continue Reading

More in Cinema News

To Top