Cinema News
இளையராஜா பெயரை கூட போடாமல் அவமானப்படுத்திய முன்னணி பத்திரிகை.! வெளியான 45 வருட உண்மை..
தமிழ் திரையுலகில் அன்றிலிருந்து இன்று வரை இளையராஜாவின் இசைக்கு மயங்காதவர்கள் யாருமே இருக்க முடியாது. அந்த அளவிற்கு மிகவும் மென்மையான இசையை மக்களுக்கு கொடுத்துள்ளார் இளையராஜா. என்னதான் இப்போது பல இசையமைப்பாளர்கள் பாடல் கொடுத்தால் கூட, இளைஞர்கள் பலர் இளையராஜாவின் பாடல்களை கேட்காமல் தூங்கியதே இல்லை.
சாதனை படைக்க ஓடி கொண்டிருப்பவர்கள் மத்தியில், ஒரு சாதனையாகவே இளையராஜா வாழ்ந்துக்கொண்டிருக்கிறார். ஆம், 1000 படங்களுக்கு மேல் இசையமைத்த ஒரே இசையமைப்பாளர் இவர் தான். இதுவரை எந்த இசையமைப்பாளரும் அந்த சாதனையை முறியடிக்கவில்லை.
இவர் சினிமாவில், இயக்குனர் ஆர்.செல்வராஜ் இயக்கத்தில் கடந்த 1976-ஆம் ஆண்டு வெளியான “அன்னக்கிளி” படத்திற்கு இசையமைத்ததன் மூலம் தான் இளையராஜா அறிமுகமானார். முதல் படத்திலே மனதிற்கு நெருக்கமான இசையுடன் பாடல்களையும், துல்லியமான பின்னணி இசையும் கொடுத்திருந்தார்.
இதையும் படியுங்களேன்- 5 தேசிய விருதுகளை தட்டி தூக்கிய சூர்யா… கொண்டாட்டத்தில் யோகி பாபு…
இந்நிலையில் , அன்னக்கிளி படத்தின் விமர்சனத்தை பிரபல ஊடகமான விகடன் எழுதிய போது படத்தின் பாடல்கள் எப்படி இருந்தது என்றும் மட்டுமே எழுதினார்களாம், இளையராஜாவின் பெயர் எந்த இடத்திலும் குறிப்பிடவே இல்லயாம். இதனை சினிமா விமர்சகர் வலைப்பேச்சு அனந்தன் சமீபத்திய ஒரு நேர்காணலில் தெரிவித்துள்ளார்.