Connect with us

Cinema News

மலையாள நடிகரை ரகசிய திருமணம் செய்த நித்யா மேனன்.?! உண்மை நிலவரம் இதோ…

பொதுவாக சினிமா துறையில், ஒரு நடிகை மற்றோரு நடிகரை காதலிப்பதாக வதந்திங்கள் பரவுவது வழக்கமான ஒன்றாக மாறிவிட்டது. அந்த வகையில், மலையாளம், தமிழ் என பல மொழிகளில் நடித்து பிஸியான நடிகையாக வளம் வருபவர் நடிகை நித்யா மேனன் குறித்தும் ஒரு தகவல் கடந்த சில நாட்களாகவே பரவி வந்தது.

அதுஎன்னவென்றால், நித்யா மேனன் விரைவில் மலையாள நடிகர் ஒருவரை திருமணம் செய்து கொள்வதாகவும், இருவரும் நடிக்க வருவதற்கு முன்பே காதலித்து வந்ததாகவும், விரைவில் இருவரும் திருமணம் செய்துகொள்ளவுள்ளதாகும் செய்திகள் பரவியது.

இதையும் படியுங்களேன்- பக்கா பிளான் போட்டு விஜய் பட வாய்ப்பை தட்டி சென்ற ராஷ்மிகா.! விவரம் தெரிஞ்ச பொண்ணு…

இந்த நிலையில், இது தொடர்பாக நித்யா மேனன் சமீபத்திய ஒரு மலையாள பத்திரிகைக்கு பேட்டி கொடுத்துள்ளார்.  அதில் ” சமூக வலைத்தளங்களில் பரவும் வதந்திகள் சிறிது கூட உண்மையில்லை, ஒரு செய்தியை வெளியிடும் போது, அது பற்றி சம்மந்த பட்டவர்களிடம் விசாரித்து உறுதி செய்த பிறகு செய்திகள் வெளியிட முயற்சிக்க வேண்டும்” என திருமண வந்தந்திக்கு முற்று புள்ளி வைத்துள்ளார் நித்யா மேனன்.

நித்யா மேனன் தற்போது தமிழில், தனுஷிற்கு ஜோடியாக திருச்சிற்றம்பலம், மலையாளத்தில் 19(1)(a) என்ற படத்திலும் நடித்துள்ளார். இந்த படத்தில் விஜய் சேதுபதியும் முக்கியமான கதாபாத்திரத்தில் நடித்துள்ளார். மேலும், இதில் திருச்சிற்றம்பலம் வரும் ஆகஸ்ட் 18-ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாகவுள்ளது  என்பது குறிப்பிடத்தக்கது.

author avatar
Manikandan
Continue Reading

More in Cinema News

To Top