2 தலையுடன் பிறந்த அதிசய கன்றுகுட்டி – புதுக்கோட்டையில் ஆச்சர்யம் !

Published On: December 19, 2019
---Advertisement---

616ccf1ed84466cbd24fde797a545244-1

புதுக்கோட்டை மாவட்டத்தில் உள்ள மீனவேலி எனும் கிராமத்தில் 2 தலைகளுடன் ஒரு கன்றுக்குட்டி பிறந்துள்ளது.

புதுக்கோட்டை மாவட்டம் விராலிமலை அருகே மீனவேலி கிராமத்தைச் சேர்ந்தவர் சுப்புராஜா. இவரது மாடு இன்று காலை கன்று ஈன்றுள்ளது. ஆனால் வெளிவந்த கன்று 4 கண்கள், 2 வாய், 2 மூக்குகளுடன் இருந்ததால் அனைவரும் ஆச்சர்யமடைந்தனர்.

பொதுவாக இதுபோல பிறக்கும் கன்றுகள் இறந்துவிடும். ஆனால் இந்த கன்றுக்கு உடலசைவுகள் இருந்ததால் கால்நடை மருத்துவர் வரவழைக்கப்பட்டுள்ளார். கன்றை பரிசோதித்த அவர் கன்றின் உயிருக்கு உத்தரவாதம் கொடுக்க முடியாது எனக் கூறியுள்ளார். இதையடுத்து சுற்று வட்டார மக்கள் அனைவரும் இந்த அதிசய கன்றை வந்து பார்த்து செல்கின்றனர்.

Leave a Comment