சீயான் 60 படத்தின் பர்ஸ்ட் லுக் மற்றும் பெயர் எப்போ? வந்தாச்சு

3529ba30f414bdfd88fb9b5ceb4f098d

விக்ரமும், அவரது மகன் துருவ் விக்ரமும் முதல்முறையாக இணைந்து நடிக்கும் படத்தை கார்த்திக் சுப்பாராஜ் இயக்கி வருகிறார். விக்ரமின் 60 வது படம் என்பதால், சீயான் 60 என குறிப்பிடப்படும் இந்தப் படத்தின் பெயர் மற்றும் பர்ஸ்ட் லுக் வெளியீட்டு தேதியை அறிவித்துள்ளனர்.

59497bf963584172e82ea653001414c6

விக்ரம் நெகடிவ் சாயல் கொண்ட கதாபாத்திரத்திலும், துருவ் விக்ரம் போலீசாகவும் நடிப்பதாக கூறப்படுகிறது. இதன் முக்கிய காட்சிகள் டார்ஜிலிங்கில் படமாக்கப்பட்டன. தொடர்ந்து நேபாள் எல்லையில் படப்பிடிப்பை நிறைவு செய்தனர்.

கார்த்திக் சுப்பாராஜின் கடைசிப்படம் ஜெகமே தந்திரம் ஏமாற்றமளித்தது. விக்ரம், துருவ் விக்ரமின் படங்களும் ரசிகர்களை கவரவில்லை. மூவருக்கும் ஒரு வெற்றி அவசியம் என்ற நிலையில் சீயான் 60 படம் தயாராகி வருகிறது. இதன் பெயர் மற்றும் பர்ஸ்ட் லுக்கை வரும் 20-ஆம் தேதி வெளியிடுவதாக அறிவித்துள்ளனர். 

2a273f891c52009746ca58f3e855f14b-3

Categories Uncategorized

Leave a Comment