விஜய் ரசிகர்களுக்கு ‘பீஸ்ட்’ படக்குழு தரும் தீபாவளி ட்ரீட்…. என்ன தெரியுமா?…

f414778813e54faad06a4e7f1f18b95d

நெல்சன் இயக்கத்தில் விஜய் நடித்து வரும் திரைப்படம் பீஸ்ட். இப்படத்தில் விஜய்க்கு ஜோடியாக பூஜா ஹெக்டே நடித்து வருகிறார். இப்படத்தின் முதல் கட்ட படப்பிடிப்பு ஜார்ஜியா நாட்டில் நடைபெற்றது. அதன்பின் 2ம் கட்ட படப்பிடிப்பு சென்னையில் நடந்தது. இதில், விஜய் – பூஜா ஹெக்டே இடையேயான பாடல் காட்சி படம்பிடிக்கப்பட்டது.  அடுத்த கட்டப்படப்பிடிப்பு ரஷ்யாவில் நடைபெறவதாக கூறப்பட்டது. ஆனால், அது தற்போது மாற்றப்பட்டு சென்னையில் 20 நாட்கள் படப்பிடிப்பு நடைபெற்று வருகிறது.  2022 கோடை விடுமுறையில் இப்படத்தை வெளியிட வேண்டும் என படக்குழு வேகமாக இயங்கி வருகிறது.

இப்படத்திற்கு அனிருத் இசையமைத்துள்ளார். இப்படத்திற்கான அனைத்து பாடல்களையும் அவர் கம்போஸ் செய்து விட்டார் எனக்கூறப்படுகிறது. இப்படத்தில் நடிகர் சிவகார்த்திகேயன் ஒரு பாடலை எழுதியுள்ளார்.

இந்நிலையில், விஜய் ரசிகர்களுக்கு தீபாவளி விருந்தாக பீஸ்ட் படத்தில் பாடல் ஒன்றை வெளியிட படக்குழு திட்டமிட்டுள்ளது. எனவே, இது விஜய் ரசிகர்களுக்கு மிகப்பெரும் ட்ரிட்டாக இது அமையும் என எதிர்பார்க்கப்படுகிறது.
 

Categories Uncategorized

Leave a Comment