Connect with us

Cinema News

சூப்பர் ஸ்டார் எனக்கு போன் செஞ்சார்.. நயன்தாரா கணவர் விக்கி செம ஹேப்பி அண்ணாச்சி…!

இந்தியாவில் முதல் முறையாக செஸ் ஒலிம்பியாட் போட்டியின் தொடக்க விழா நேற்று சென்னையில் நடைபெற்றது . இந்தப் போட்டி நேற்று முதல் தொடங்கி அடுத்த மாதம் 10ஆம் தேதி வரை நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

சென்னை மாமல்லபுரத்தில் நடைபெற்று வரும் 44வது செஸ் ஒலிம்பியாட் போட்டியில் 188 நாடுகளைச் சேர்ந்த 2000க்கும் மேற்பட்ட போட்டியாளர்கள் பங்கேற்றுள்ளனர். ஒலிம்பியாட் போட்டியை தொடங்கி வைப்பதற்காக பிரதமர் மோடி இரண்டு நாள் பயணமாக நேற்று சென்னை வருகை தந்தார்.

மேலும், இந்த போட்டியில் நடிகர்கள் ரஜினிகாந்த், கமல்ஹாசன், விஜய், அஜித் உள்ளிட்ட பிரபலங்கள் சிறப்பு அழைப்பாளர்களாக பங்கேற்க அழைக்கப்பட்டனர். ஆனால், நேற்று ரஜினிகாந்த், கார்த்தி விக்னேஷ் சிவன் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.

இதையும் படிங்களேன்  – நீங்க மறந்து போன பிரமாண்டத்தின் சீக்ரெட்… இந்தியன்-2 எங்கே எப்போது தொடங்க போகுது தெரியுமா.?!

நேற்று மாமல்லபுரத்தில் பிரம்மாண்டமாக நடைபெற்ற இந்த செஸ் ஒலிம்பியாட் போட்டியின் தொடக்க விழாவை  இயக்கிவர் யார் தெரியுமா.? அது வேற யாருமில்ல… நம்ம நயன்தாராவின் கணவர் விக்னேஷ் சிவன் தான். நேற்று நடைபெற்ற இந்த பிரம்மாண்ட விழாவை பலரும் கண்டு மகிழ்ந்தனர். அதில் ஒருவராக ரஜினியும் உண்டு என தெரிய வந்துள்ளது.

அட ஆமாங்க…. இந்த பிரம்மாண்ட தொடக்க விழாவை பார்த்து வியந்து போன சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த், இயக்குனர் விக்னேஷ் சிவனை மேடையில் ஒன்றாக அமைந்திருக்கும் போது வாழ்த்தி உள்ளார். இதன்பின்  இந்த விழா முடிந்ததும்  வீட்டுக்கு சென்ற சூப்பர் ஸ்டார் போன் கால் செய்தும் விக்னேஷ் சிவனை பாராட்டி  தனது வாத்துக்களை தெரிவித்துள்ளார். இதனை, இயக்குனர் விக்னேஷ் சிவன் தனது ட்விட்டர் பக்கத்தில் ஹாப்பியாக பகிர்ந்து கொண்டார்.

author avatar
Manikandan
Continue Reading

More in Cinema News

To Top