தமிழ்ப்படங்களில் ஸ்டைலாக காட்சிப்படுத்தும் இயக்குனர்களில் ஒருவர் விஷ்ணுவர்த்தன். கும்பகோணம் இவரது சொந்த ஊர். தமிழ்த்திரையுலகிற்கு 2003ல் குறும்பு படத்தின் மூலம் அறிமுகமானார்.
முதல் படம் தோல்வியைத் தழுவ தொடர்ந்து தனது தீவிர முயற்சியால் புதுப்புது யுக்திகளைக் கையாண்டு அடுத்தடுத்தப் படங்களில் கவனம் செலுத்தத் தொடங்கினார். தல அஜித்துக்கு இரு படங்களை இயக்கியுள்ளார்.

இவரது படங்களில் இசை அமைப்பாளர் யாரென்றால் யுவன் சங்கர் ராஜா தான். பெரும்பாலான படங்களில் ஒளிப்பதிவாளரும் நீரவ் ஷா தான். அந்த வரிசையில் இவரும் தொடர்ந்து ஹிட் கொடுக்க ஆரம்பித்தார். அந்த வரிசையில் வெளியான சில படங்களைப் பார்ப்போம்.
அறிந்தும் அறியாமலும்

2005ல் வெளியான இந்தப்படத்தில் ஆர்யா, பிரகாஷ்ராஜ், நவ்தீப், சமிக்சா, கிருஷ்ணா உள்பட பலர் நடித்துள்ளனர். யுவன் சங்கர் ராஜா இசை அமைத்துள்ளார்.
ஏல ஏல, கொஞ்சம் கொஞ்சம், என் கண்ணோடு, தீ பிடிக்க, சில் சில் ஆகிய சூப்பர்ஹிட் பாடல்கள் உள்ளன. இவை இளைஞர்களைத் திரையரங்கில் ஆட்டம் போடச் செய்தன.
பட்டியல்
2006ல் வெளியான இந்தப்படத்திற்கும் இசை அமைப்பாளர் யுவன் தான். ஆர்யா, பரத், பூஜா, பத்மப்பிரியா, கொச்சின் ஹனிபா உள்பட பலர் நடித்துள்ளனர். இது ஒரு வித்தியாசமான கதைகளத்துடன் உண்மைச்சம்பவத்தை அடிப்படையாகக் கொண்டு வெளிவந்தது. ரசிகர்களை மிகவும் கவர்ந்த படம்.
டேய் நம்ம, ஏதேதோ, கண்ணை விட்டு, போக போக, நம்ம காட்டுல ஆகிய பாடல்கள் உள்ளன.
பில்லா
2007ல் வெளியான இந்தப்படம் அல்டிமேட் ஸ்டார் அஜீத் நடித்தது. மிகவும் ஸ்டைலான படம். அவரது லுக்கே ஹாலிவுட் சூப்பர்ஸ்டார் பாணியில் இருக்கும். அவருடன் இணைந்து நயன்தாரா, நமிதா, பிரபு, சந்தானம் உள்பட பலர் நடித்துள்ளனர்.
யுவன் ஷங்கர் ராஜா இசை அமைத்துள்ளார். விறுவிறுப்பான திரைக்கதையுடன் படம் போவதே தெரியாமல் எடுத்திருப்பார் இயக்குனர் விஷ்ணுவர்த்தன். மெகா ஹிட்டானது. மை நேம் இஸ் பில்லா, வெத்தலய போட்டேன்டி, செய் ஏதாவது, நான் மீண்டும், சேவல் கொடி ஆகிய பாடல்கள் பட்டையைக் கிளப்பின.
சர்வம்

2009ல் வெளியான இந்தப்படத்தில் ஆர்யா, திரிஷா, ஜே.டி.சக்ரவர்த்தி, இந்திரஜித் உள்பட பலர் நடித்துள்ளனர். யுவனின் இசையில் பாடல்கள் வழக்கம்போல சூப்பர். அடடா வா, நீதானே, சுட்ட சூரியனே, காற்றுக்குள்ளே, சிறகுகள் ஆகிய பாடல்கள் உள்ளன.
ஆரம்பம்
2013ல் வெளியான இந்தப்படத்திலும் அல்டிமேட் ஸ்டார் தல அஜீத் தான். அவருடன் இணைந்து ஆர்யா, நயன்தாரா, டாப்சி உள்பட பலர் நடித்துள்ளனர். இந்தப்படமும் செம ஹிட் அடித்தது. ரசிகர்களுக்கு வெற்றிப்பட இயக்குனரானார் விஷ்ணுவர்த்தன்.
யுவன் ஷங்கர் ராஜாவின் அதிரடி இசை படத்திற்குப் பிளஸ் பாயிண்ட். பாடல்கள் அனைத்தும் பட்டையைக் கிளப்பும் ரகங்கள். அடடடடா ஆரம்பமே, என் பியூசும் போச்சு, ஹரே ராமா, மேலால வெடிக்குது, ஸ்டைலிஷ் தமிழச்சி ஆகிய பாடல்கள் உள்ளன.
இவர் மணிரத்னம், ராம்கோபால் வர்மா ஆகியோரிடம் உதவி இயக்குனராக பணியாற்றியுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.
