Connect with us
lokesh_main_cine

Cinema News

ஒரே வீடியோவில் தளபதி ரசிகர்களுக்கு ஷாக் கொடுத்த லோகேஷ்… என்ன ப்ரோ இப்படி சொல்லிடீங்க….

தளபதி விஜய் பீஸ்ட் திரைப்படத்தை தொடர்ந்து தற்போது வாரிசு திரைப்படத்தில் நடித்து வருகிறார். இந்த திரைப்படம் தெலுங்கு, தமிழ் என இரு மொழி திரைப்படமாக உருவாகி வருகிறது. இதன் படபிடிப்பும் தற்போது விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது.

 

இந்த திரைப்படத்தை விட ரசிகர்கள் மிகவும் ஆவலாக எதிர்பார்த்திருக்கும் திரைப்படம் எது என்றால் இன்னும் அறிவிக்கப்படாமல் இருக்கும் தளபதி விஜயின் 67-வது திரைப்படம் தான்.  இப்படம் குறித்து தயாரிப்பு தரப்பில் இருந்து இன்னும் அதிகாரப்பூர்வமாக அறிவிக்கவில்லை என்றாலும் மாஸ்டர் கூட்டணி தான் மீண்டும் இணையவுள்ளது என்பது 90 சதவீத உண்மையாக இருக்கலாம் சினிமா வட்டாரத்தில் பேசப்படுகிறது.

அதன்படி, லோகேஷ் கனகராஜ் இப்படத்தின் முழு கதைகளையும் முடித்து வைத்திருப்பார் என்று ரசிகர்கள் எதிர்பார்த்து காத்திருந்த நிலையில், அண்மையில் லோகேஷ் கொடுத்த ஒரு பேட்டி சின்ன ஷாக்கை கொடுத்துள்ளது

இதையும் படிங்களேன் – அங்க சுத்தி இங்க சுத்தி கடைசில மஹாத்மா காந்தியையும் விட்டு வைக்கலயா.? யார் ஹீரோ தெரியுமா.?!

அதாவது, இப்படம் குறித்த கேள்விக்கு லோகேஷ் கனகராஜ் கூறுகையில், அடுத்த படத்திற்கான வேலை தற்போது ஆரம்பிக்கவில்லை என்றும் இனிமேல் தான் ஆரம்பமாகவுள்ளது, கடந்த 10 நாட்களாக கதையை எழுதி வருகிறேன் இன்னும் முடியவில்லை என்று கூறியதோடு இது குறித்த விரிவான அதிகாரப்பூர்வ அறிவிப்பு விரைவில் வெளியாகும் என கூறியுள்ளார். இவர் பேசிய இந்த வீடியோ பார்த்து தான் ரசிகர்கள் ஷாக் ஆகியுள்ளனர்.

author avatar
Manikandan
Continue Reading

More in Cinema News

To Top