மாதவனை காலில் விழவைத்த சூப்பர் ஸ்டார் ரஜினி… வைரலாகும் புத்தம் புது வீடியோ…

Published on: July 31, 2022
---Advertisement---

தமிழ் மற்றும் ஹிந்தி சினிமாக்களில் நல்ல நடிகராக இருப்பவர் நடிகர் மாதவன். ராக்கெட்ரி திரைப்படம் மூலம் இயக்குனராகவும் அறிமுகமானார். ராக்கெட் விஞ்ஞானி நம்பி நாராயணன் அவர்களின் வாழ்வை தழுவி இந்த படத்தை மாதவன் இயக்கியிருந்தார்.

மேலும், அவரே நம்பி நாராயணன் கதாபாத்திரத்தில் நடித்திருந்தார். படத்தைப் பார்த்த பலரும் தங்களது பாராட்டுகளை தெரிவித்து இருந்தனர். படம் ரிலீஸ் ஆன சமயத்திலேயே சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் மாதவனுக்கு பாராட்டை தெரிவித்து இருந்தார்.

மேலும், இது இளைஞர்களுக்கு ஒரு முன் உதாரணமாக இருக்கும். என்று தனது வாழ்த்தில் குறிப்பிட்டு இருந்தார். இந்நிலையில் அண்மையில் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் வீட்டிற்கு நம்பி நாராயணன் மற்றும் மாதவன் ஆகியோர் சென்றுள்ளனர்.

இதையும் படியுங்களேன் – நம்ம லெஜண்ட் அண்ணாச்சியின் அசத்தல் பேச்சு.. ஆடிப்போன தமிழ் சினிமா…

அங்கு மாதவனுக்கு பொன்னாடை போர்த்தி சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் மரியாதை செலுத்தினார். அப்போது அவரது காலில் விழுந்து மாதவன் ஆசீர்வாதம் வாங்கினார். இதனை வீடியோவாக  தனது சமூக வலைதள பக்கத்தில் பதிவிட்டு இருந்தார் மாதவன். இந்த வீடியோ தற்போது மிகவும் வைரலாக இணையத்தில் பரவி வருகிறது.

Manikandan

முருகன், சினிரிப்போர்டஸ் தமிழ் இணையதளத்தில் கடந்த 8 ஆண்டுகளாக பணியாற்றி வருகிறார். ஊடகத்துறையில் 10 ஆண்டுகளுக்கு மேல் அனுபவம் கொண்டவர். இளங்கலை பட்டதாரியான இவர், வெப்துனியா தமிழ் இணையதளத்தில் 2016 ஆம் ஆண்டு பணியைத் தொடங்கினார். இந்த தளத்தில் சினிமா செய்திகளை வழங்கி வருகிறார். மேலும் இணையதள செய்தி ஆசிரியராகவும் பணியாற்றி வருகிறார்.