தளபதி விஜய் பீஸ்ட் திரைப்படத்தை தொடர்ந்து தற்போது வாரிசு திரைப்படத்தில் நடித்து வருகிறார். இந்த திரைப்படம் தெலுங்கு, தமிழ் என இரு மொழி திரைப்படமாக உருவாகி வருகிறது. இதன் படபிடிப்பும் தற்போது விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது.

இந்த திரைப்படத்தை தொடர்ந்து, தளபதி விஜயின் 67-வது திரைப்படம் குறித்து இன்னும் அதிகாரப்பூர்வமாக அறிவிக்கவில்லை என்றாலும் இயக்குனர் லோகேஷுடன் தான் இணையவுள்ளார் என்று சினிமா வட்டாரத்தில் முதல் ரசிகர்கள் மத்தியில் வரை பேசப்பட்டு வருகிறது.

இதைவிட தற்போது, தளபதியின் 68-வது திரைப்படம் குறித்த பேச்சுக்கள் சமூக வலைதளங்களில் அதிகரித்துள்ளது. இது குறித்த ஆராய்ந்தபோது, தளபதியின் 68 படத்தை சன் பிக்சர்ஸ் நிறுவனம் தயாரிக்கவுள்ளதாகவும் இந்த படத்தை சிறுத்தை சிவா இயக்கவுள்ளதாகவும் தகவல் வெளியாகியுள்ளது.
இதையும் படிங்களேன் – விஜயகாந்தை அவமானப்படுத்திய பத்திரிகையாளர்கள்… அவர் கொடுத்த சரியான பதிலடி.!

இந்நிலையில், சிறுத்தை சிவா ஏற்கனவே விஜய்யுடம் ஒரு கதை சொல்லிருப்பதாகவும் அது குறித்த பேச்சு வார்த்தைகள் நடைபெற்று வருவதாகவும் கூறப்டுகிறது. ஆனால், இது குறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பு ஏதும் இல்லை. இதனை அறிந்த விஜய் ரசிகர்கள் இவருடன் கூட்டணியா என்று வசைபாடுவதோடு வேண்டாம் என்றும் கோரிக்கை வைத்து வருகின்றனர்.

