Connect with us

Cinema News

அந்த ஹீரோ பேர் சொல்லமாட்டேன்.! அவர் ரெம்ப கூச்சப்பட்டாரு… உளறிய விருமாண்டி நாயகி.!

விருமாண்டி படத்தில் கமலஹாசனுக்கு ஜோடியாக அன்னலட்சுமி என்ற கதாபாத்திரத்தில் நடித்ததன் மூலம் ஒட்டுமொத்த ரசிகர்கள் மனதை கொள்ளை அடித்தவர் அபிராமி . இந்த திரைப்படத்தின் மூலம் இவருக்கு விருமாண்டி அபிராமி என்றே ரசிகர்கள் பெயர் வைத்து விட்டனர்.

அந்த அளவிற்கு அருமையாக அந்த திரைப்படத்தில் நடித்திருப்பார். இந்த படத்தை தொடர்ந்து கிட்டத்தட்ட 10 ஆண்டுகள் ஏதேனும் சில காரணங்களால் சினிமாவை விட்டு விலகி இருந்தார். பிறகு 36 வயதினிலே, மாறா சுல்தான், உள்ளிட்ட படங்களில் சிறிய கதாபாத்திரங்களில் நடிப்பதற்கான வாய்ப்பு மட்டுமே இவருக்கு கிடைத்தது.

இதையும் படியுங்களேன்- 16 வருஷமா சிம்பு மேல செம லவ்வு!….பகீர் கிளப்பும் இன்னோரு சீரியல் நடிகை…..

முந்தைய காலத்தைப் போல இவருக்கு பெரிதாக படங்களில் நடிப்பதற்கான வாய்ப்புகள் ஏதும் கிடைக்கவில்லை. இந்த நிலையில், சமீபத்திய ஒரு நேர்காணலில் இவர் சில விஷயங்களை பகிர்ந்து உள்ளார். அதில் தனக்கு ஒரு படத்தில் நடிப்பதற்கான வாய்ப்பு கிடைத்ததாகவும் அந்த படத்தின் ஹீரோ தான் ஹீரோயின் என்று கூறிய பிறகு படத்திலிருந்து விலகி விட்டதாகவும் தெரிவித்துள்ளார்.

 ஏனென்றால், அந்த ஹீரோவை விட நடிகை அபிராமி சற்று உயரமாக இருந்தாராம் இதனால் கூச்சமாக இருக்கும் என்பதற்காக அந்த ஹீரோ படத்தில் இருந்து விலகி விட்டாராம். அந்த ஹீரோவின் பெயரை கேட்டதற்கு பெயரை அபிராமி சொல்லவே இல்லை. இதனை பார்த்த ரசிகர்கள் அந்த ஹீரோவா..? இந்த ஹீரோவா என தனக்கு தெரிந்த நடிகர்களின் பெயரை கருத்தில் பதிவிட்டு வருகிறார்கள்.

author avatar
Manikandan
Continue Reading

More in Cinema News

To Top