
மேலும் சமந்தா தொடர்ந்து வெப்சீரியஸ்களிலும் நடித்து வருகிறார். திரைப்படங்களை விட வெப்சீரிஸ் அதற்கு ரசிகர்கள் ஆதரவு அதிகமாக இருப்பதால் தற்போது சமந்தாவும் வெப்சீரிஸ் பக்கம் திரும்பியுள்ளார். சமீபத்தில் இவர் நடிப்பில் ஓடிடி தளத்தில் ‘தி பேமிலி 2’ மேன் என்ற படம் வெளியானது.

இதில் இலங்கை தமிழர்களையும், விடுதலைப்புலிகளை பற்றியும் தவறாக சித்தரிக்கப்பட்டிருந்ததாக குற்றச்சாட்டு எழுந்தது. ஆதலால் தமிழக அரசு, சில அரசியல் கட்சிகள் இத்தொடருக்கு தடை விதிக்கவேண்டும் என கோரிக்கை வைத்தன. அனால், அதையும் மீறி இடத்தொடர் வெளியானது.
போரடச்சிடுச்சு!…நடிப்புக்கு குட்பை!…அதிர்ச்சி அறிவிப்பை வெயிட்ட சமந்தா…
இந்நிலையில் சமந்தா, மக்களுக்கு இருக்கும் சொந்த கருத்துக்களை நான் அனுமதிக்கிறேன், அந்த கருத்தில் அவர்கள் அப்படியே தொடரும் பட்சத்தில் மற்றவர்களின் சென்டிமென்டை காயப்படுத்தியிருந்தால் நான் மன்னிப்பு கேட்டுக்கொள்கிறேன் என்றார்.

இப்படி ஏதாவது ஒன்றை நான் வேண்டுமென்றே செய்வதாக அவர்கள் நினைத்துக்கொள்ளக்கூடாது என்பதற்காகவே மன்னிப்பு கேட்டுக்கொள்கிறேன். நான் யாரையும் காயப்படுத்த விரும்பவில்லை. அப்படி நடந்திருந்தால் அதற்காக வருந்துகிறேன் என்றார்.
தற்போது அவர் நடித்து தமிழ் படங்கள் வெளியாக உள்ளதாலேயே அவர் மன்னிப்பு கேட்டுள்ளார் என்கிறார்கள். மேலும், ஆரம்பத்திலேயே அவர் மன்னிப்பு கேட்டிருந்தால் அவர்மீது இன்னும் மதிப்பு அதிகரித்திருக்கும் என்கிறார்கள். தற்போது தமிழில் விக்னேஷ் சிவன் இயக்கத்தில் காத்துவாக்குல ரெண்டு காதல் கதை என்ற படத்தில் நடித்து வருகிறார்.