ஹீரோயினை மாத்திட்டீங்களா…? சூட்டிங் ஸ்பாட்டிலிருந்து கோபமாக வெளியேறிய விஜய்…!

Published on: August 5, 2022
vijay_main_cine
---Advertisement---

தளபதி விஜய் தற்போது வம்சி இயக்கத்தில் வாரிசு படத்தில் நடித்துக் கொண்டிருக்கிறார். இந்த படத்த்தில் விஜய்க்கு ஜோடியாக ராஷ்மிகா மந்தனா நடிக்கிறார்.மேலும் படத்தில் சரத்குமார், பிரபு, யோகிபாபு, சங்கீதா, சியாம் உட்பட பலரும் நடிக்கும் இந்த படத்திற்கு தமன் இசையமைக்கிறார்.       இந்த படத்தின் படப்பிடிப்பு ஐதராபாத்தில் நடைபெற்றுக் கொண்டிருக்கிறது.

vijay1_cine

படப்பிடிப்பு சமயத்தில் நடிகர் விஜய் எல்லாரிடமும் சகஜமாக பழகும் தன்மை கொண்டவர் என நாம் அறிந்த ஒன்று. ஆனால் மிகவும் கோபமாக வெளியேறிய சம்பவம் ஒன்று அரங்கேறியிருக்கிறது. அதுவும் அவர் நடித்த திருமலை படத்தின் படப்பிடிப்பு சமயத்தில் தான். அந்த படத்திற்கு முதலில் ஹீரோயினாக  கமிட் ஆனது தெலுங்கு சூப்பர் ஸ்டார் மகேஸ்பாபுவின் மனைவியும் நடிகையுமான நம்ரதா சிரோத்கர் தான்.

vijay2_cine

இவரை வைத்து மூன்று நாள்கள் சூட் எடுத்துள்ளார்கள். அதன் பின் படத்தின் இயக்குனர் ரமணா படத்தை பார்த்த போது அவருக்கு திருப்தி இல்லாத காரணத்தால் நடிகையை மாற்றிவிடலாம் என நினைத்திருக்கிறார். பல போராட்டங்களுக்கு பிறகு நடிகையிடமும் சம்மதம் பெற்று நம்ரதாவை விலக்கிவிட்டு ஜோதிகாவை கமிட் செய்துள்ளார். இந்த விஷயத்தை விஜயின் அப்பாவிடம் தான் தெரிவித்துள்ளார் இயக்குனர்.

vijay3_cine

மறு நாள் சூட்டிங்கில் அதே ஷார்ட்டை திரும்பவும் எடுக்க விஜய் ஏன் என கேட்க ஹீரோயினை மாற்றிவிட்டோம் என சொல்ல கடுங்கோபத்தில் விஜய் அங்கிருந்து புறப்பட்டு விட்டாராம். ஒரு மணி நேரம் கழித்து திரும்பவும் வந்து இயக்குனரிடம் எதுவும் பேசாமல் அந்த காட்சியை எடுத்து கொடுத்துள்ளார் விஜய். பின் இயக்குனரை அழைத்து என்கிட்ட சொல்லியிருக்கனும் என தன் கோபத்தின் காரணத்தையும் கூறியுள்ளார் விஜய்.

Rohini

முருகன், சினிரிப்போர்டஸ் தமிழ் இணையதளத்தில் கடந்த 8 ஆண்டுகளாக பணியாற்றி வருகிறார். ஊடகத்துறையில் 10 ஆண்டுகளுக்கு மேல் அனுபவம் கொண்டவர். இளங்கலை பட்டதாரியான இவர், வெப்துனியா தமிழ் இணையதளத்தில் 2016 ஆம் ஆண்டு பணியைத் தொடங்கினார். இந்த தளத்தில் சினிமா செய்திகளை வழங்கி வருகிறார். மேலும் இணையதள செய்தி ஆசிரியராகவும் பணியாற்றி வருகிறார்.