டிக்டாக்கில் எப்போதும் இருப்பார்… பல பெண்களுடன் தொடர்பு – மனைவியின் விபரீத முடிவு !

Published on: February 4, 2020
---Advertisement---

dbaf46014e5dd8055428570d8f7e0416

தன் கணவர் வேலைக்கு செல்லாமல் டிக்டாக்கிலேயே கிடையாக இருந்த கணவரால் மனைவி இரு முறை தற்கொலை முயற்சி செய்த சம்பவம் கடலூரில் நடந்துள்ளது.

கடலூர் மாவட்டம் பண்ருட்டி அருகே உள்ளது விரிஞ்சிபாக்கம் கிராமத்தைச் சேர்ந்தவர்கள் செல்லமுத்து மற்றும் யாமினி தம்பதியினர். இருவரும் காதலித்து கடந்த ஆண்டு திருமணம் செய்துகொண்டுள்ளனர். ஆனால் திருமணத்துக்குப் பின் செல்லமுத்து வேலைக்கு எதுவும் செய்யாமல் டிக்டாக், பேஸ்புக் என சமுக வலைதளங்களிலேயே மூழ்கிக் கிடந்துள்ளார்.

இது சம்மந்தமாக யாமினி அவரைக் கேட்டபோது அவருடன் தகராறு செய்துள்ளார். இதனால் யாமினி தற்கொலைக்கு முயன்றுள்ளார். அப்போது உறவினர்கள் மற்றும் அக்கம் பக்கத்தினர் அவரை மருத்துவமனையில் சேர்த்து சிகிச்சை அளித்து காப்பாற்றியுள்ளனர்ஆனால் அதன் பிறகும் மாறாத செல்லமுத்து மீண்டும் சமூக வலைதளங்களில் பல பெண்களுடன் கடலை போடுவதிலேயே குறியாக இருந்துள்ளார். இதை அவரது மனைவி யாமினி கண்டு பிடித்துள்ளார்.

இதைப்பற்றி அவரிடம் கேட்ட போது செல்லமுத்து மீண்டும் திமிராகப் பேசியுள்ளார். இதனால் மனமுடைந்த யாமினி மீண்டும் விஷம் குடித்துத் தற்கொலைக்கு முயன்றுள்ளார். அவரைக் காப்பாற்றிய வரை மீட்டு பண்ருட்டி அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்த்தனர். இதையடுத்து மருத்துவமனைக்கு வந்த போலீஸார் இருவரிடமும்  விசாரணை நடத்தி வருகின்றனர்.

Leave a Comment