Connect with us

Cinema News

அதுதான் மாஸ்… தனுஷை வச்சி செய்து வரும் நெட்டிசன்கள்… பாவம்யா அந்த மனுஷன் விட்ருங்க….

தனுஷ் நடிப்பில் உருவாகியுள்ள திருச்சிற்றம்பலம் திரைப்படம் வரும் ஆகஸ்ட் 18-ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாகவுள்ளது. இதனை முன்னிட்டு படத்திற்கான இசை வெளியீட்டு விழா கடந்த சில நாட்களுக்கு முன்பு சென்னையில் பிரமாண்டமாக நடைபெற்றது.

இந்த இசை வெளியீட்டு விழாவில் தனுஷ் பேசிய மாஸ் வசனம் தற்போது மீம்ஸ் கிரியேட்டர்களுக்கு பக்க பலமாக மாறியுள்ளது. ஏனென்றால், தனுஷ் பேசிய அந்த மாஸ் வார்த்தையை அவருடைய புகைப்படமுடைய டெம்ப்ளேட்டை வைத்தும் பல மீம்ஸ்கள் வருகிறது.

இதையும் படியுங்களேன்- அவர் தான் வேணும் அடம்பிடிக்கும் லோகேஷ்.! முடிவு தளபதி கையில்… பதட்டத்தில் ரசிகர்கள்….

திருச்சிற்றம்பலம்  இசை வெளியீட்டு விழாவில் தனுஷ் பேசியிருந்தது ” மாஸ்ன்னா என்ன? ஒரு ஹீரோ பத்து பேர அடிச்சிட்டு கெத்தா நின்னா அது மாஸ், ஒரு ஹீரோ செஞ்சிருவன்ன்னு வசனம் பேசுனா அது மாஸ், இல்ல கடைசி நேரத்தில் ஆபத்துல இருக்குறவங்கள காப்பாத்துனா மாஸ் என்பது போல பேசியிருந்தார்.

ஆனால் தனுஷ் சாதாரணமாக பேசிய இந்த வசனம் பலரும் கலாய்த்து வருகிறார்கள். ஏனென்றால், பலர் தனுஷை வைத்து கலாய்பதோடு மட்டுமில்லாமல், தங்களுக்கு பிடித்த நடிகர்களையும் வைத்து கலாய்த்து  வருகிறார்கள். நெட்டிசன் ஒருவர் ” மாஸ் -னா எது சூர்யா நடித்து வெங்கட் பிரபு இயக்கிய படம்” என்றும் மற்றோரு நெட்டிசன் ” எல்லாரும் இந்த டெம்ப்ளேட்ட போடுறாங்கனு நம்மலும் போட்டா அது மாஸ்” எனவும் ட்வீட் போட்டு வருகிறார்கள்.

dhanush2_cine

தனுஷ் டெம்ப்ளேட் வைரலாகி வருவது சில தனுஷ் ரசிகர்களுக்கு உற்சாகமாக இருந்தாலும் கூட சில ரசிகர்களுக்கு சற்று பயமாக இருக்கிறது. இதனால், பாவம்யா அந்த மனுஷன் விட்ருங்க என்று கருத்துக்களை பதிவிட்டு வருகிறார்கள். 

author avatar
Manikandan
Continue Reading

More in Cinema News

To Top