டிவியில் செய்தி வாசிப்பாளராக இருக்கும் போதே தனக்கென ஒரு ரசிகர் கூட்டத்தை வைத்திருந்தவர் பிரியா பவானி சங்கர். ‘கல்யாணம் முதல் காதல் வரை’ தொலைக்காட்சித் தொடர் மூலம் நடிகையாக மாறினார்.

அதையடுத்து சினிமாவில் நடிக்கும் வாய்ப்புகள் அவரை தேடி வர 2017ல் வெளியான மேயாத மான் திரைப்படத்தில் ஹீரோயினாக அறிமுகமானார்.

முதல் படமே ரசிகர்களை கவர்ந்து ஹிட் அடிக்க தொடர்ந்து கடைக்குட்டி சிங்கம், மான்ஸ்டர், மாபியா, ஓ மனப்பெண்ணே, யானை ஆகிய படங்களில் நடித்துள்ளார். தனுஷ் நடிப்பில் விரைவில் வெளியாகவுள்ள திருச்சிற்றம்பலம் படத்தில் இவர் நடித்துள்ளார்.

தற்போது 5க்கும் மேற்பட்ட படங்களை கைவசம் வைத்திருக்கும் பிரியா பவானி சங்கர் சமூகவலைத்தளங்களில் தனது புகைப்படங்களை தொடர்ந்து பகிர்ந்து வருகிறார். சமீபத்தில் வெளிநாட்டுக்கு சுற்றுலா சென்ற அவர் அங்கு எடுக்கப்படும் புகைப்படங்களை பகிர்ந்து வருகிறார்.

இந்நிலையில், பெல்ஜியம் நாட்டில் எடுக்கப்பட்ட அழகான புகைப்படத்தை பகிர்ந்து ரசிகர்களை குஷிப்படுத்தியுள்ளார்.

