தலைவர் 170.! தனது நண்பருக்காக சம்பளத்தை பாதியாக குறைத்த ரஜினிகாந்த்.! அந்த நல்ல மனசு தான் சூப்பர் ஸ்டார்.!

Published on: August 15, 2022
---Advertisement---

சூப்பர் ஸ்டார் ரஜினி தற்போது “ஜெயிலர்” திரைப்படத்தில் நடிக்க உள்ளார். இந்த திரைப்படம் ரஜினியின் 169 வது திரைப்படமாக உருவாகிறது. இப்பட ஷூட்டிங் விரைவில் ஹைதராபாத்தில் பிரமாண்ட செட்டில் ஆரம்பமாகும் கூறப்படுகிறது.

jailer

Also Read

ஜெயிலர் திரைப்படத்தை நெல்சன் இயக்க உள்ளார். சன் பிக்சர்ஸ் படத்தை தயாரிக்கிறது. அனிருத் இசையமைக்கிறார். இதில் தமன்னா ஹீரோயினாக நடிக்கிறார் என்று கூறப்படுகிறது. மேலும், பலர் இப்படத்தில் நடிக்க உள்ளனர்.

இதையும் படியுங்களேன்- அதிர்ச்சி மேல் அதிர்ச்சி.. அடுத்தடுத்து லீக் ஆகும் வாரிசு விடீயோக்கள்… அப்செட்டில் தளபதி விஜய்.!

தற்போது ரஜினியின் அடுத்த படம் பற்றிய தகவல் தற்போது வெளியாகியுள்ளது. ரஜினி அடுத்ததாக ஆஸ்கர் பிலிம்ஸ் ரவிச்சந்திரன் தயாரிப்பில் ஒரு புதிய படத்தில் நடிக்க பேசி வருகிறாராம். ரஜினியும் ஆஸ்கர் பிலிம்ஸ் ரவிச்சந்திரனும் நீண்ட வருடங்கள் நண்பர்களாக இருந்தவர்கள்.

ஆனால், அவர்கள் இணைந்து இதுவரை ஒரு படம் கூட செய்யவில்லை. இருந்தும், ரஜினி, தான் ஏதேனும் சினிமா சம்பந்தப்பட்டதோ அல்லது மற்ற விஷயங்களோ, ரஜினி கலந்து ஆலோசிக்கும் நபர்களில் ரவிச்சந்திரன் முக்கியமானவராம்.

அப்படிப்பட்ட நண்பர் தற்போது எந்த படத்தையும் தயாரிக்காமல் இருந்து வருகிறார். இதனை கண்ட ரஜினி, தனது சம்பளத்தில் பாதியை குறைத்து கொண்டு ஆஸ்கர் பிலிம் ரவிச்சந்திரனுக்காக ஒரு படத்தில் நடித்து கொடுக்க சம்மதித்து உள்ளாராம் விரைவில். இது பற்றிய அறிவிப்பு சில மாதங்களில் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.