லட்சுமி மேனன் முதல் ஸ்ரீதிவ்யா வரை…காணாமல் போன கனவு கன்னிகளின் தற்போதை நிலை!….

Published on: August 16, 2022
---Advertisement---

சினிமாவில் சில இளம் நடிகைகள் நடிக்க வரும்போது அட டா என்ன அருமையாக நடிக்கிறார்கள் இவர்கள் தமிழ் சினிமாவில் முன்னணி நடிகையாக கண்டிப்பாக வளம் வருவார் என பலர் யோசிப்பது உண்டு. ஆனால், எனோ சில காரணங்களால் அவருக்கு பட வாய்ப்புகள் கிடைக்காமல் போக சினிமாவை விட்டு காணாமல் போய்விடுவார்கள்.

அப்படி ஒரு காலத்தில் முன்னணி நடிகையாக வளம் வந்து இப்போது காணாமல் போன சில 4 நடிகைகளை பற்றி பார்க்கலாம்.

இதையும் படியுங்களேன்- விடிய விடிய பண்றாங்க…நான் மிரண்டு போய்ட்டேன்… அந்த ஹீரோவால் கடுப்பான சின்னத்திரை நயன்தாரா.!

1.ஸ்ரீதிவ்யா

வருத்தப்படாத வாலிபர் சங்கம் படத்தில் நடித்ததன் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமான ஸ்ரீ திவ்யா முதல் படத்திலே பலரது மனதை கொள்ளையடித்தார். தொடர்ந்து ஹோம்லி பெண்ணாக நடித்து வந்ததால் என்னவோ, இவருக்கு பெரிதாக பட வாய்ப்புகள் கிடைக்கவில்லை இதனால் இப்போது என்னதான் ஆனார் என்றே தெரியவில்லை.

2.லட்சுமி மேனன்

கும்கி திரைப்படத்தில் நடித்ததன் மூலம் அறிமுகமானவர் லட்சுமி மேனன். இந்த படத்தை தொடர்ந்து விஷால், கார்த்தி, ஜெயம் ரவி என பல முன்னனி ஹீரோக்களுடன் படத்தில் நடித்து தமிழில் ஒரு ரவுண்ட் வந்தார். ஆனால், இவருக்கு பெரிதாக பட வாய்ப்புகள் இல்லாத காரணத்தால் சினிமாவுக்கு தற்காலிகமாக ஓய்வு கொடுத்துவிட்டு தனது படிப்பில் கவனம் செலுத்தி வருகிறார்.

3.கயல் ஆனந்தி

kayal anandhi

கயல் படத்தில் நடித்ததன் மூலம் ரசிகர்களுக்கு மத்தியில் பிரபலமானவர் நடிகை ஆனந்தி. உடல் எடையை பார்க்கும் போது கொஞ்சம் சிறிய பெண்ணாக இருந்ததால் என்னவோ இவருக்கு பட வாய்ப்புகள் கிடைக்கவில்லை. தற்போது பெயர் தெரியாத சிறிய பட்ஜெட் படங்களில் மட்டுமே நடித்து வருகிறார்.

4.மேகா ஆகாஷ்

meha_main

ஒரு காலத்தில் தமிழ், தெலுங்கு என இரண்டு மொழிகளில் கலக்கி வந்தவர் நடிகை மேகா ஆகாஷ். தனுஷிலிருந்து சிம்பு வரை பல டாப் நடிகர்களுடன் இவர் நடித்துள்ளார். ஆனால் கவர்ச்சியாக நடிக்கவில்லை என்பதாலோ இவருக்கு இப்போது பட வாய்ப்புகள் இல்லை. இதனால் ஒரு நல்ல படத்தில் நடிக்க வாய்ப்பு கிடைக்குமா என்பதற்காக காத்துள்ளார்.

Manikandan

முருகன், சினிரிப்போர்டஸ் தமிழ் இணையதளத்தில் கடந்த 8 ஆண்டுகளாக பணியாற்றி வருகிறார். ஊடகத்துறையில் 10 ஆண்டுகளுக்கு மேல் அனுபவம் கொண்டவர். இளங்கலை பட்டதாரியான இவர், வெப்துனியா தமிழ் இணையதளத்தில் 2016 ஆம் ஆண்டு பணியைத் தொடங்கினார். இந்த தளத்தில் சினிமா செய்திகளை வழங்கி வருகிறார். மேலும் இணையதள செய்தி ஆசிரியராகவும் பணியாற்றி வருகிறார்.