இணையத்தை அதிர வைத்த இறப்பு செய்தி.. யார் அந்த கௌஷிக்… வருத்தத்தில் தென்னிந்திய சினிமா.!

Published on: August 16, 2022
---Advertisement---

பிரபல இணையதளமான டிவிட்டரில் நேற்று ஒரு ஹேஷ்டேக் ட்ரெண்டிங்கில் இருந்து வந்தது. அது என்ன ஹேஷ்டேக் என்றால், #RIPKaushikLM என்கின்ற ஹேஷ்டேக் தான். இது குறித்து ஆராய்ந்த போது, இவர் பிரபல திரைப்பட விமர்சகரும், தமிழ் சினிமா ட்ராக்கர் என்றும் தெரியவந்துள்ளது.

அவருக்கு வயது 36, இந்த இளம் வயது இறப்பு தமிழ் திரையுலகிற்கு பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. தற்போது, பலரும் இவரது இறப்பிற்கு சமூக வலைத்தளங்களில் தங்களது ஆழ்ந்த இரங்கலை தெரிவித்து வருகின்றனர்.

தமிழ் சினிமாவில் புகழ்பெற்ற திரைப்பட விமர்சகர் மற்றும் பிரபலங்களின் ‘பிஆர்வோ’ ஆக இருந்த கௌசிக் நேற்று மாரடைப்பு காரணமாக காலமானார். இவரது மறைவுக்கு கீர்த்தி சுரேஷ், தயாரிப்பாளர் எஸ்.ஆர் பிரபு, தனுஷ், துல்கர் சல்மான் உள்ளிட்ட திரைப் பிரபலங்கள் பலரும் இரங்கல் தெரிவித்து வருகின்றன.

இதையும் படிங்களேன் – லட்சுமி மேனன் முதல் ஸ்ரீதிவ்யா வரை…காணாமல் போன கனவு கன்னிகளின் தற்போதை நிலை!….

கௌசிக் தனது டிவிட்டர் பக்கத்தில், சினிமா தொடர்பான அப்டேட்டுகள், திரைப்பட  விமர்சனத்தையும் பதிவிட்டு வந்தார். மேலும், ட்வீட்டரில் சுமார் 427 லட்சம் பேர் கொண்ட பாலோவர்ஸை வைத்து இருக்கிறார். இன்று அவரது இறுதி சடங்கு சென்னையில் நடக்கிறது.

Manikandan

முருகன், சினிரிப்போர்டஸ் தமிழ் இணையதளத்தில் கடந்த 8 ஆண்டுகளாக பணியாற்றி வருகிறார். ஊடகத்துறையில் 10 ஆண்டுகளுக்கு மேல் அனுபவம் கொண்டவர். இளங்கலை பட்டதாரியான இவர், வெப்துனியா தமிழ் இணையதளத்தில் 2016 ஆம் ஆண்டு பணியைத் தொடங்கினார். இந்த தளத்தில் சினிமா செய்திகளை வழங்கி வருகிறார். மேலும் இணையதள செய்தி ஆசிரியராகவும் பணியாற்றி வருகிறார்.