
தமிழ் சினிமாவில் மூத்த நடிகர் விஜயகுமாரின் மகன் என்ற மிகப்பெரிய அடையாள பெயர் இருந்தாலும் நடிகர் அருண் விஜய் தொடர்ந்து புதிய நடிகர் போன்றே தனது திறைமைகளை ஒவ்வொரு படத்திலும் வித்யாசமாக வெளிப்படுத்தி வருகிறார். அவரின் நடிப்பு திறமை, தோற்றம், ஸ்டைல் என படிப்படியாக உயர்கிறது.

இந்நிலையில் தற்போது அறிவழகன் இயக்கத்தில் அருண் விஜய் நடித்துள்ள படம் பார்டர். இந்த படத்தில் ரெஜினா, ஸ்டெபி படேல், பகவதி பெருமாள் உள்ளிட்டோர் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளனர். ஆக்ஷன் காட்சிகள் தெறிக்க உருவாகியிருக்கும் இப்படத்தின் ட்ரைலர் யூடியூபில் வெளியாகி நல்ல விமர்சனங்களை பெற்று வருகிறது.