Connect with us
vijayakanth

Cinema History

நீங்க திமிரு என நினைத்தாலும் பரவாயில்லை… அந்த சம்பவத்தில் சொக்க தங்கம் நம்ம கேப்டன் விஜயகாந்த்.!

கேப்டன் விஜயகாந்த், இந்த ஒரு பெயர் போதும். மனிதாபமானத்துக்கும், யார் என்ன உதவி கேட்டாலும் தயங்காமல் செய்யும் உதவி குணத்திற்கும். கம்பீரத்திற்கும் அடையாளமாக நல்ல அர்த்தமாக இருக்கும்.

அந்தளவுக்கு இவர் செய்ததை தற்போதும் பலரும் நினைத்து, தற்போது இவர் நிலை எப்படி இருக்கிறாரே என எதிரியும் கூட வருந்தான் செய்வார்கள். அந்தளவுக்கு மிக உயர்ந்த மனிதர் விஜயகாந்த்.

இவர் வீட்டிற்கு சென்றால் எப்போதும் சாப்பாடு உண்டு என்பதை பலர் கூற கேட்டிருக்கிறோம். அந்த யோசனை எப்படி வந்தது என்பதை அவரே கூறிவிடுகிறார். அதாவது, இவர் துணை நடிகராக இருந்த போது, சாப்பிட உட்காரும் போது, ஹீரோ வந்துவிட்டார் என யாரையும் சாப்பிட விடவில்லை.

இதையும் படியுங்களேன் – யாரு சொன்னது நான் ஃபீல்ட் அவுட்னு.!? அனிருத்தின் அடுத்த ஆலுமா டோலுமா ரெடி.!

அன்றைக்கு முடிவு செய்தேன். அது போல, எனது தயாரிப்பு நிறுவனம் ஆரம்பித்தவுடன், முதன் முறையாக நான் தான் வாழை இலை வைத்து சாப்பாடு போட்டேன். அதற்கு முன்பு பார்சல் சாப்பாடு தான். இதனை பெருமையாக சொல்வேன். நீங்க இதனை திமிரு என நினைத்தாலும் பரவாயில்லை என கம்பீரமாக சொன்னார் நம்ம சொக்கத்தங்கம் கேப்டன் விஜயகாந்த்.

google news
Continue Reading

More in Cinema History

To Top