Connect with us

Cinema News

சூப்பர் ஸ்டாரின் அந்த படம் வெளங்காம போனதுக்கு காரணமே 2 பொண்ணுங்க தான்.! வெளுத்து வாங்கிய பிரபலம்.!

சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடிப்பில் கடைசியாக வெளியான திரைப்படம் அண்ணாத்த. இந்த திரைப்படம் பலத்த எதிர்பார்ப்புகளுக்கு மத்தியில் ரிலீஸ் ஆனது. ஏனென்றால், ரஜினி நடிப்பில் வெகு நாட்களுக்கு பிறகு ஒரு கிராமத்து திரைப்படம்.

விஸ்வாசம் எனும் மெகா ஹிட் திரைப்படத்திற்கு பிறகான சிறுத்தை சிவா இயக்கத்தில் வெளியாகும் திரைப்படம். என எதிர்பார்ப்பு இருந்தது. ஆனால், படத்தின் ரிலீஸ் முதல் ஷோவிலேயே தெரிந்துவிட்டது. படம் தோல்வியை தழுவியது.

இந்த படம் தோல்வி அடைந்ததற்கு முக்கிய காரணமாக, கதைக்களம் வீக்கான திரைக்கதை என ரசிகர்களை வெகுவாக சோதித்தது இந்த திரைப்படம். இதன் தோல்விக்கு வேறு ஒரு காரணம் இருப்பதாக பிரபல அரசியல் விமர்சகர் சவுக்கு சங்கர் அண்மையில் ஒரு நேர்காணலில் தெரிவித்தார்.

இதையும் படியுங்களேன் – இந்த இயக்குனர்கள் தயாரிப்பாளர்களின் செல்ல பிள்ளைகள்.! ஆச்சர்யமூட்டும் சூப்பர் தகவல்கள்…

அவர் கூறுகையில், ‘ அண்ணாத்த திரைப்படம் வெளங்காம போனதற்கு முக்கிய காரணம் ரஜினியின் இரண்டு மகள்கள் தான். அவர்கள் தான் எங்க அப்பாவுக்கு இப்படி நடித்தால் ஆகாது. இந்த மாதிரி சண்டை காட்சி வைத்தால் ஆகாது என, இந்த தூசு ஒத்துக்காது என கூறியதால் தான் இப்படி படம் ஆகிவிட்டது.’ என கூறி, அப்படத்தில் வேலைபார்த்த ஒரு முக்கிய பிரமுகம் கூறினாராம்.’இதனை அந்த நேர்காணலில் அவர் தெரிவித்தார்.

author avatar
Manikandan
Continue Reading

More in Cinema News

To Top