திருச்செந்தூர் கடற்கரையில் கள்ளக்காதல் ஜோடி தற்கொலை: பெரும் பரபரப்பு

Published on: February 5, 2020
---Advertisement---

ccca05dc0babd4382c82106d4b2cd2ba

திருச்செந்தூர் கடற்கரையில் கள்ளக்காதல் ஜோடி ஒன்று விஷம் குடித்து தற்கொலை செய்துகொண்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது 

விருதுநகர் மாவட்டம் சிவகாசியை சேர்ந்த கணேசன் என்பவரும் அதே பகுதியைச் சேர்ந்த ஜெயலட்சுமி என்பவரும் சமையல் தொழிலாளியாக வேலை பார்த்து வந்தனர். இருவருக்கும் தனித்தனியே திருமணமாகி குழந்தைகள் இருக்கும் நிலையில் இருவருக்கும் இடையே திடீரென கள்ளக்காதல் ஏற்பட்டது 

இந்த நிலையில் இந்த கள்ளக்காதலை கணேசனின் மனைவியும், ஜெயலட்சுமியின் கணவரும்  கண்டித்தனர். ஆனாலும் இருவரும் தொடர்ந்து கள்ளக்காதலில் ஈடுபட்டு வந்தனர். கணேசமூர்த்தி மற்றும் ஜெயலட்சுமி ஆகிய இருவரது வீட்டிலும் தொடர்ந்து நெருக்குதல் கொடுத்து வந்ததால் இருவரும் ஓடிப்போக முடிவு எடுத்தனர்

சமீபத்தில் இருவரும் திருச்செந்தூர் சென்று அங்குள்ள  கோவிலில் சாமி கும்பிட்டு விட்டு பின்னர் கடற்கரையில் உட்கார்ந்த நிலையில் திடீரென  இருவரும் தற்கொலை செய்ய முடிவு செய்ததாக கூறப்படுகிறது. இதனையடுத்து விஷம் வாங்கி தற்கொலை செய்து கொண்டதாகவும் கூறப்படுகிறது

 இன்று அதிகாலை கடற்கரைக்கு சென்ற பொதுமக்கள் இருவரும் வாயில் நுரை தள்ளி இறந்து கிடந்ததை பார்த்து அதிர்ச்சி அடைந்து போலீசுக்கு தகவல் கொடுத்தனர். போலீசார் விரைந்து வந்து இருவரது உடலையும் கைப்பற்றி பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர். பின்னர் இருவரும் அடையாளம் காணப்பட்டு அவரவர் குடும்பத்தினருக்கு போலீசார் தகவல் அளித்தனர் கள்ளக்காதல் ஜோடி ஒன்று திருச்செந்தூர் கடற்கரையில் விஷம் குடித்து தற்கொலை செய்துகொண்ட சம்பவம் அந்த பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது

Leave a Comment