Cinema News
நன்றாக நடிக்க தெரிந்தும் சினிமாவில் ஜொலிக்காத நட்சத்திரங்கள்…லிஸ்ட் இதோ…
தமிழ் சினிமாவில் நடிகர்கள் என்றவுடன் நமக்கு டக்கென ரஜினி, கமல், விஜய், அஜித், சூர்யா, விக்ரம், தனுஷ், சிம்பு, சிவகார்த்திகேயன், விஜய் சேதுபதி என ஒரு பத்து நடிகர்களின் பெயரை விறுவிறுவென்று சொல்லி விடுவோம். ஆனால், அவர்களுக்கு ஓரளவு நெருக்கமாகவும், சில காதாபாத்திரங்களில் அவர்களை தாண்டியும் நடிக்கும் நல்ல நடிகர்கள் இங்கு இருக்கத்தான் செய்கிறார்கள் என்பது நிதர்சனமான உண்மை.
சினிமாவில் ஜெயிப்பதற்கு திறமை எவ்வளவு முக்கியமோ, அதேபோல நடிகர்கள் தேர்ந்தெடுக்கும் கதையும் அவர்களுக்கு ஏற்ற கதாபாத்திரமும் அதனை முறையாக ரிலீஸ் செய்யும் தயாரிப்பாளரும் தான் என்பதும் கூடுதல் தகவல். அப்படி தமிழ் சினிமாவில் நன்றாக நடிகர் தெரிந்தும், இன்னும் தமிழ் சினிமாவில் இடம் பிடிக்க தவறிய சில நடிகர்களை பற்றி தற்போது பார்க்கலாம்,
விதார்த் – மைனா திரைப்படம் மூலம் தமிழ் சினிமாவில் ஹீரோவாக அறிமுகமானவர். முதல் படத்திலேயே முத்திரை பதித்தவர். அதன் பிறகு பல படங்களில் தனது அழுத்தமான நடிப்பின் மூலம் நல்ல பெயர் பெற்றவர். ஆனாலும் ஏனோ இன்னும் தமிழ் சினிமாவில் பெரிய இடத்திற்கு வராமல் இருக்கிறார்.
அட்டகத்தி தினேஷ் – பா.ரஞ்சித் இயக்கிய முதல் திரைப்படமான அட்டகத்தி எனும் திரைப்படம் மூலம் அறிமுகமானவர் தினேஷ். அதற்கு முன்னர் பல்வேறு திரைப்படங்களில் சிறு சிறு வேடத்தில் நடித்துள்ளார். விசாரணை போன்ற ஆஸ்கர் லெவல் திரைப்படதிலும் சிறப்பான நடிப்பை வெளிப்படுத்தி உள்ளார். இருந்தும் ஏனோ இன்னும் சினிமாவில் ஒரு நிலையான இடத்தை பிடிக்காமல் தடுமாறி வருகிறார்.
மாஸ்டர் மகேந்திரன் – இப்படி அழைப்பதாலோ என்னவோ, அனைவரும் இவர் இன்னும் குழந்தை நட்சத்திரம் தான் என்று நினைப்பில் இருக்கின்றனர். குழந்தை நட்சத்திரமாக தமிழ் சினிமாவில் நீண்ட வருடங்கள் பயணித்தவர் மகேந்திரன். கடைசியாக இவர் நடிப்பு மாஸ்டர் திரைப்படத்தில் சின்ன வயது விஜய் சேதுபதியாக மிரட்டி கவனத்தை ஈர்த்து இருந்தார். சரியான கதாபாத்திரமும் கதைக்களமும் அமைந்தால் நிச்சயம் ஒரு ரவுண்டு வருவார் என கூறப்படுகிறது.
இதையும் படியுங்களேன் – எனக்கு சத்தம் கம்மியா இருக்கனும்.! அஜித் போட்ட ஹாலிவுட் லெவல் கண்டிஷன் பற்றி தெரியுமா.!
விமல் – இவருக்கு நன்றாக நடிக்க தெரியும். அசால்டான கிராமத்து இளைஞன் கதாபாத்திரம் என்றால் இவரை மிஞ்சுவதற்கு தற்போது ஆளில்லை என்றே கூறலாம். அந்த அளவுக்கு சிறப்பாக எதார்த்தமாக நடித்து விடுவார். ஆனாலும் ஏனோ சரியான கதை தேர்வு இல்லாமல் தனக்கேற்ற கதாபாத்திரங்களை தேர்வு செய்யாமல் இன்னும் ஓர் நிலையான இடத்தை பிடிக்க முடியாமல் தடுமாறி வருகிறார். அண்மையில் இவர் நடிப்பில் வெளியான விலங்கு வெப் சீரிஸ் இவருக்கு நல்ல கம்பேக் படமாக அமைந்தது. அதனை பயன்படுத்தி அடுத்தடுத்த படங்களில் ஜொலிப்பார் என எதிர்பார்க்கப்படுகிறது.
கதிர் : குறிப்பிட்ட சில படங்களில் அவ்வப்போது கவனத்தை ஈர்த்தாலும் இன்னும் ஓர் இவருக்கான நிலையான இடம் தமிழ் சினிமாவில் இருக்கிறது என்றே கூறுகின்றனர் தமிழ் சினிமா ரசிகர்கள்.