Connect with us

Cinema News

இயக்குனர் லிங்குசாமிக்கு 6 மாத சிறைத்தண்டனை….நீதிமன்றம் பரபரப்பு தீர்ப்பு….

தமிழ் சினிமாவில் ஆனந்தம் திரைப்படம் மூலம் இயக்குனராக மாறியவர் லிங்குசாமி. அதன்பின் சண்டக்கோழி, ஜீ, பையா, வேட்டை, அஞ்சான் உள்ளிட்ட சில படங்களை இயக்கினார். சமீபத்தில் கூட அவரின் இயக்கத்தில் வாரியர் என்கிற திரைப்படம் வெளியானது.

அஞ்சான் திரைப்படத்தால் ஏற்பட்ட நஷ்டத்தால் லிங்குசாமி கடந்த சில வருடங்களாகவே கடன் தொல்லையில் அவதிப்பட்டு வந்தார்.

இந்நிலையில், எண்ணி ஏழு நாள் என்கிற படத்தை இயக்குவதற்காக பிவிபி கேப்பிட்டல் என்கிற நிறுவனத்திடம் லிங்குசாமி பெற்ற கடன் தொகை ரூ.1.03 கோடியை இதுவரை செலுத்தவில்லை என லிங்குசாமி மீது நீதிமன்றத்தில் பிவிபி கேப்பிட்டல் நிறுவனம் சென்னை சைதாப்பேட்டை நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தது.

lingu

மேலும், லிங்குசாமி கொடுத்த காசோலை பணமில்லாமல் திரும்பி வந்துவிட்டதாகவும் சமீபத்தில் தெரிவிக்கப்பட்டது. இது தொடர்பான விசாரணை நடைபெற்று வந்த நிலையில், லிங்குசாமிக்கு 6 மாதம் சிறைத்தண்டனை விதிப்பதாக நீதிமன்றம் இன்று அதிரடி தீர்ப்பை வழங்கியுள்ளது.

 

இந்த விவகாரம் திரையுலகில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

author avatar
சிவா
முதுகலை பட்டதாரியான இவர் 12 ஆண்டுகளாக பணியாற்றிய அனுபவம் கொண்டவர். சினிமா, அரசியல்,வணிகம் மற்றும் சமூகம் சார்ந்த கட்டுரைகளை வழங்கி வருகிறார். தற்போது கடந்த 12 ஆண்டுகளாக சினி ரிப்போர்டஸ் தளத்தில் செய்தி ஆசிரியராக பணியாற்றி வருகிறார்.
Continue Reading

More in Cinema News

To Top