ஜென்டில்மேன்,இந்தியன் உட்பட பல தமிழில் திரைப்படங்கள் இயக்கிய ஷங்கரின் மகள் திதி ஷங்கர். மருத்துவம் படித்துவிட்டு மருத்துவராகாமல் சினிமா துறைக்கு வந்தவர்.

குட்டிப்புலி, கொம்பன், மருது உள்ளிட்ட சில திரைப்படங்களை இயக்கிய முத்தையா இயக்கத்தில் உருவான விருமன் படத்தில் கார்த்திக்கு ஜோடியாக நடித்துள்ளார். இப்படம் சில நாட்களுக்கு முன்பு வெளியாகி ரசிகர்களிடம் வரவேற்பை பெற்றது.

விருமன் படத்திற்கு பின் சிவகார்த்திகேயன் நடிப்பில் உருவாகி வரும் மாவீரன் படத்திலும் அதிதி நடிக்கவுள்ளார்.

ஒருபக்கம், தற்போதுள்ள நடிகைகளை ஓவர் டேக் செய்வதற்காக விதவிதமான உடைகளில் போட்டோஷூட் நடத்தி சமூகவலைத்தளங்களில் புகைப்படங்களை பகிர்ந்து வருகிறார்.

இந்நிலையில், அவரின் புதிய புகைப்படங்கள் இணையத்தில் வைரலாகி வருகிறது.

