">
Warning: Undefined array key 0 in /srv/users/cinereporters/apps/cinereporters/public/wp-content/themes/click-mag/single.php on line 137
Warning: Attempt to read property "cat_name" on null in /srv/users/cinereporters/apps/cinereporters/public/wp-content/themes/click-mag/single.php on line 137
இப்ப எதுக்கு என்.ஆர்.சி? குருமூர்த்திகிட்ட கேட்டே சொல்லுங்க!. ரஜினியை கலாய்க்கும் நெட்டிசன்கள்
மத்தியில் ஆளும் பாஜக அரசு கொண்டுவந்த குடியுரிமை திருத்த மசோதா மற்றும் என்.ஆர்.சி. தேசிய மக்கள் பதிவேடு (குடிமக்களின் தேசிய பதிவு) ஆகியவற்றிற்கு நாடெங்கும் எதிர்ப்பு கிளம்பியுள்ளது.�
இதற்கு எதிராக டெல்லியில் பல்கலைக்கழக மானவர்கள் போராடு வருகின்றனர். ஆனால், விரைவில் அரசியலுக்கு வருவதாய் அறிவித்துள்ள நடிகர் ரஜினிகாந்த் இதுவரை அதுபற்றி எந்த கருத்தும் தெரிவிக்காமல் இருந்தார்.
இந்நிலையில், இன்று காலை செய்தியாளர்களிடம் பேசிய அவர் ‘இந்த சட்டத்தால் இந்தியாவில் உள்ள முஸ்லிம்களுக்கு எந்த ஆபத்தும் இருக்காது என்றும் ஒருவேளை அப்படி ஆபத்து ஏற்பட்டால் நான்தான் முதலில் குரல் கொடுப்பேன் என்றும் கூறினார். அதேபோல் என்ஆர்சி என்பது மிகவும் அவசியமானது என்றும் இந்த சட்டத் நடைமுறைக்கு வந்தால் தான் வெளிநாட்டினர் எத்தனை பேர் இந்தியாவில் இருக்கின்றார்கள் என்பது தெரியவரும் என்றும் அவர் குறிப்பிட்டார்.
ரஜினியின் இந்த கருத்து சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. ரஜினி அடிப்படை விஷயங்கள் தெரியாமல் பேசுகிறார் என பல அரசியல் தலைவர்களும், நெட்டிசன்களும் கூறி வருகின்றனர்.
சென்சஸ் என்பது மக்கள் தொகை கணக்கெடுப்பு.. NPR என்பது மக்கள் தொகை பதிவேடு.. பத்து வருடங்களுக்கு ஒரு தடவை சென்சஸ்தான் இதுவரை எடுத்திருக்கிறார்கள்.. இப்ப மக்கள் தொகை பதிவேடு ஏன் ?.. குருமூர்த்தியிடம் கேட்டே பதில் சொல்லலாம்’ என அவர்கள் பதிவிட்டு வருகின்றனர். மேலும், பாஜகவின் கருத்தையே ரஜினி பிரதிபலிப்பதாகவும், அவரின் கருத்துக்கு பின்னால் பாஜக செயல்படுவதாகவும் அவர்கள் பதிவிட்டு வருகின்றனர்.
திரு ரஜினி அவர்களே
சென்சஸ் என்பது மக்கள் தொகை கணக்கெடுப்பு
NPR என்பது மக்கள் தொகை பதிவேடு
பத்து வருடங்களுக்கு ஒரு தடவை சென்சஸ்தான் இதுவரை எடுத்திருக்கிறார்கள்
இப்ப மக்கள் தொகை பதிவேடு ஏன் ?
குருமூர்த்தியிடம் கேட்டே பதில் சொல்லலாம் !— மெத்த வீட்டான் (@HAJAMYDEENNKS) February 5, 2020
சொந்தமா கொஞ்சம் யோசிங்க சார்!
செல்லா தோட்டுப் பிரச்சனையிலும் அவங்க சொன்னததானே சரின்னீங்க. pic.twitter.com/fwHeYflUJj
— kanagaraj (@cpmkanagaraj) February 5, 2020