நாங்க என்ன கேட்டோம்.? நீங்க என்ன செய்றீங்க.? சிம்புவை நொந்து கொண்ட ரசிகர்கள்… விவரம் இதோ…

Published on: August 25, 2022
---Advertisement---

சிம்பு நடிப்பில் அவரது 25வது படமாக வெளியான திரைப்படம் விண்ணைத்தாண்டி வருவாயா. இந்த படத்தை கௌதம் வாசுதேவ் மேனன் இயக்கி இருந்தார். திரிஷா நாயகியாக நடித்து இருந்தார்.

Also Read

இந்த படம் வெளியாகி தற்போது வரையில் பலரது ஃபேவரைட் திரைப்படமாக இருக்கிறது. இதன் இரண்டாம் பாகம் வரும் என இயக்குனர் கெளதம் மேனன் அவ்வப்போது கூறி வந்தார். ஆனால் அதற்கான அறிகுறி தெரியவில்லை. ரசிகர்கள் விண்ணைத்தாண்டி வருவாயா 2 எப்போது வரும் என எதிர்பார்த்து காத்திருக்கின்றனர்.

இதையும் படியுங்களேன் – அடிக்கடி கருக்கலைப்பு… ஓவியாவின் ஒல்லி உடம்பிற்கு இதுதான் காரணம்.. சர்ச்சையில் சிக்கிய பிரபல நடிகர்.!

தற்போது கெளதம் வாசுதேவ் மேனன் இயக்கத்தில் சிம்பு நடித்து முடித்துள்ள திரைப்படம் வெந்து தணிந்தது காடு. இந்த படம் வரும் செப்டம்பர் 15ஆம் தேதி வெளியாக உள்ளது. இந்த படத்தின் பாடல்கள், ட்ரைலர் செப்டம்பர் 5ஆம் தேதி வெளியாக உள்ளது.

இதையும் படியுங்களேன் – என்னடா ரவுடி ஹீரோவுக்கு வந்த புது பிரச்சனை… லைகர்-ஐ கிழித்து தொங்கவிடும் ரசிகர்கள்.. டிவிட்டர் விமர்சனம் இதோ…

இப்படத்தின் ஷூட்டிங் தற்போது லக்னோவில் நடைபெற்று வருவதாக தகவல் வெளியானது. பட ரிலீஸ் சமயத்தில் ஷூட்டிங்கா என விசாரித்தால், அது வெந்து தணிந்தது காடு திரைப்படத்தின் 2ஆம் பாகத்திற்கான தொடக்க காட்சியாம். அதனை படத்தில் இணைத்து 2ஆம் பாக எதிர்பார்ப்பை கொடுத்து விடுவார்களாம்.

இதனை பார்த்த சிம்பு ரசிகர்கள், விண்ணைத்தாண்டி வருவாயா 2ஆம் பாகத்தை வெகு வருடங்களாக கேட்டு கொண்டிருக்கிறோம். ஆனால், அதனை விடுத்து வெந்து தணிந்தது காடு திரைப்படத்தை எடுக்க முயற்சித்து வருகிறாரே என கேள்வி கேட்டு வருகின்றனர்.