தனுஷ் செய்த வேலையில்தான் பாரதிராஜாவுக்கு இந்த நிலைமையா?!..இது என்னடா புதுக்கதை…..

Published on: August 26, 2022
---Advertisement---

தமிழ் சினிமாவில் பல தரமான நல்ல படங்களை இயக்கியவர் இயக்குனர் பாரதிராஜா.  பல நல்ல கருத்துள்ள படங்களை சாமானிய மக்களுக்கும் பிடிக்கும் வண்ணம் படமாக்கியதால் தான் இயக்குனர் இமையம் என அன்போடு அழைக்கப்பட்டார்.

 

வயது மூப்பு காரணமாக இயக்கத்திற்கு விடுப்பு வீட்டுள்ள பாரதிராஜா, நடிப்பதில் ஆர்வம் காட்டி நடித்து வருகிறார். அவர் நடிப்பில் அண்மையில் திருச்சிற்றம்பலம் எனும் திரைப்படம் ரிலீஸ் ஆகி இருந்தது.

சமீபத்தில் திரையுலகினரை ஷாக் ஆக்கிய செய்தி என்றால் அது பாரதிராஜா உடல்நலக்குறைவு காரணமாக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளது தான். முதலில் தி நகரில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டவர், தற்போது, அமைந்தகரையில் உள்ள தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்றுவருகிறார் என தகவல் வெளியாகி வருகிறது.

இதையும் படியுங்களேன் – இந்த தடவை யாரும் சிக்கல… விஜய் டிவி எடுத்த அதிரடி முடிவு.! மகிழ்ச்சியில் பிக் பாஸ் ரசிகர்கள்…

இந்நிலையில் இவர் உடல் நலம் சரியில்லாததற்கு காரணம் தற்போது வெளியாகியுள்ளது. அதாவது,திருச்சிற்றம்பலத்தில் இவரது நடிப்பு மிக பிரபலக பேசப்பட்டது. மிகவும் கலகலப்பாக இவர் நடித்து இருந்தார் இயக்குனர் பாரதிராஜா.

இதையும் படியுங்களேன் – டாப் நடிகர்களுக்கே டஃப் கொடுத்த ராஜ்கிரண்… யாரு படமா இருந்தாலும் இவர் தான் ஹீரோ.! லிஸ்ட் இதோ…

 இதனால் திருச்சிற்றம்பலத்தை தியேட்டர் சென்று பாரதிராஜா பார்த்தாராம். அதற்கு கிடைத்த வரவேற்பை பார்த்து பாரதிராஜா உணர்ச்சிவசப்பட்டு விட்டாராம். அதன் காரணமாக தான் அவருக்கு உடல்நிலை சரியில்லாமல் போய்விட்டது என சினிமா வட்டாரத்தில் தகவல்கள் வெளியாகி உள்ளது.

Manikandan

முருகன், சினிரிப்போர்டஸ் தமிழ் இணையதளத்தில் கடந்த 8 ஆண்டுகளாக பணியாற்றி வருகிறார். ஊடகத்துறையில் 10 ஆண்டுகளுக்கு மேல் அனுபவம் கொண்டவர். இளங்கலை பட்டதாரியான இவர், வெப்துனியா தமிழ் இணையதளத்தில் 2016 ஆம் ஆண்டு பணியைத் தொடங்கினார். இந்த தளத்தில் சினிமா செய்திகளை வழங்கி வருகிறார். மேலும் இணையதள செய்தி ஆசிரியராகவும் பணியாற்றி வருகிறார்.