நீங்க நினைச்சது தப்பு…அந்த 2 ரஜினி படமும் பிளாப்தான்!…முக்கிய சினிமா பிரபலம் பகீர்…

Published On: August 28, 2022
rajini_main_cine
---Advertisement---

சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடிப்பில் வெளியான பெரும்பாலான திரைப்படங்கள் சூப்பர் ஹிட் தான். அதில் நிறைய படங்கள் மெகா ஹிட் திரைப்படங்கள். தற்போதும் அந்த படங்களுக்கு ரசிகர்கள் ஏராளம்.

ஆனாலும், ஒரு சில படங்களின் வெற்றி பற்றி நாம் ஒரு கற்பனை செய்து இருப்போம். அனால், நடந்தது  வேறு ஒன்றாக இருக்கும். இந்த படம் இப்போதே இந்த வரவேற்பு கிடைத்துள்ளதே, அப்போது எப்படி இருந்திருக்கும் என சிலர் நினைப்பதுண்டு. ஆனால் அது தவறான நினைப்புதான்.

ஆம், அப்படி 2 ரஜினி படங்கள் தான் இந்த லிஸ்டில் இருக்கிறது. இதில் ஒரு படம் மன்னன். பி.வாசு எனும் பெரிய இயக்குனர் இயக்கத்தில், சூப்பர் ஸ்டார் ரஜினி , லேடி சூப்பர் ஸ்டார் விஜயசாந்தி , குஷ்பூ , கவுண்டமணி, விசு, மனோரமா என நட்சத்திரங்கள் பலர் நடித்த இந்த திரைப்படம் பெரிய எதிர்பார்ப்புகளுக்கு மத்தியில் வெளியானது.

இதையும் படியுங்களேன் –  நீ இப்படி இருந்தால் தான் ரெம்ப அழகா இருக்க… ஓப்பனாக கமெண்ட் அடித்த தனுஷ்.! வெளியான சீக்ரெட்…

படம் இப்போதும் பார்க்கலாம். அந்தளவுக்கு நன்றாக இருக்கும். ஆனால், வெளியான போது எதிர்பார்த்த வெற்றியை இந்த திரைப்படம் பெறவில்லையாம். இன்னொரு படம்  கேட்டால் ஷாக் ஆகி விடுவீர்கள். அது தான் மணிரத்னம் இயக்கத்தில் ரஜினி முதன் முதலாக நடித்த தளபதி திரைப்படம். ரஜினியுடன் மம்முட்டி நடித்து இருப்பார்.

இதையும் படியுங்களேன் – நான் எவளோ கஷ்டப்படுகிறேன் தெரியுமா.? ஆனால் ரஜினி..? இது கமலின் பாராட்டா.?! விமர்சனமா.?

இப்போதும் இந்த படத்திற்கு ரசிகர்கள் ஏராளம். தற்போதுள்ள பல வெற்றிப்பட இயக்குனர்களுக்கு ஓர் உந்துசக்தி இந்த படம். ஆனாலும், வெளியான புதிதில், ரஜினி படத்திற்கான எதிர்பார்ப்பு, அந்த அம்சங்கள் படத்தில் குறைவாக இருந்ததால், படம் நாம் நினைத்த அளவுக்கு ஹிட் ஆகவில்லையாம். ஓரளவு ஹிட் அவ்வளுவுதான் என்கிறார் பிரபல சினிமா விமர்சகர், மூத்த நடிகர் சித்ரா லட்சுமணன்.