எதிர்பாக்க வச்சி ரசிகர்களை வச்சு செஞ்ச ஹீரோக்கள்!…முக்கிய படங்களின் லிஸ்ட் இதோ…

Published on: August 28, 2022
---Advertisement---

சில படங்கள் ரசிகர்களின் எக்கச்சக்க எதிர்பார்ப்பை அறிவிப்பின் போதே பெற்று விடும். அது அந்த நடிகர்களின் புகழ், அந்த இயக்குனரின் முந்தைய ஹிட், நடிகர் – இயக்குனர் கூட்டணி, அந்த படம் மோத போகும் பெரிய படம் என எதுவாகவோ ஒன்று அமைந்து விடும்.

அது சில சமயம் பெரிய ஆபத்தாகவும் அமைந்து விடும். அப்படி எதிர்பார்த்த ரசிகர்களுக்கு கொஞ்சம் தொய்வு ஏற்பட்டாலும் படத்தின் ரிசல்ட் பயங்கரமாக அடிவாங்கி விடும். அப்படி ரசிகர்களை கதறவைத்த திரைப்படங்களின் லிஸ்ட் இதோ…

பாபா – ரஜினி கதை, திரைக்கதை எழுதி அவரே தயாரிக்கிறார், முந்தைய படமான படையப்பா மிக பெரிய வெற்றி என்ற பெரும் எதிர்பார்ப்புகளுக்கு மத்தியில் வெளியான இந்த படம், பழைய பார்மட் திரைக்கதை என்பதால் படம் ரசிகர்கள் எதிர்பார்ப்பை பூர்த்தி செய்யவில்லை. படம் பிளாப் ஆகி போனது.

ஆளவந்தான் – கமல்ஹாசனுக்கு இது புதிதில்லை. அவர் எது புதுசாக தமிழ் சினிமாவில் அறிமுகப்படுத்தினாலும் அது அந்த சமயம் விமர்சிக்கப்பட்டு தற்போது ஆகோ ஓகோ என புகழப்படும். அப்படி ஒரு படம் தான் ஆளவந்தான். இந்த படம் பற்றி கூறினால் இந்த கட்டுரை தாங்காது என்பதால், அந்த சமயம் பெரிய பட்ஜெட் என எதிர்பார்க்கப்பட்டு, பெரிய பிளாப் என மாறிப்போனது என்று மட்டும் கூறிக்கொள்ளலாம்.

கந்தசாமி – சியான் விக்ரம் திரைப்படத்தில் அந்த சமயம் அதிக பட்ஜெட். பெரிய ஆக்சன் திரைப்படம், பாடல், ட்ரைலர் என எல்லம் பெரிய ஹிட் என்ற எதிர்பார்போடு வந்து, ரசிகர்களை திரைக்கதையாலும், அதனை படமாக்கிய விதித்தாலும் சோதித்த திரைப்படம் கந்தசாமி.

இதையும் படியுங்களேன் –  நீ இப்படி இருந்தால் தான் ரெம்ப அழகா இருக்க… ஓப்பனாக கமெண்ட் அடித்த தனுஷ்.! வெளியான சீக்ரெட்…

சுறா – இளைய தளபதி விஜயின் 50 வது திரைப்படம், சன் பிக்ச்சர்ஸ் தயாரிப்பு, வழக்கமான கமர்சியல் படம் என்றாலும், விஜயின் 50வது படம் பாடல்கள் பெரிய ஹிட் என்றவுடனே ஒரு நல்ல கமர்ஷியல் படம் என எதிர்பார்த்து காத்திருந்தனர் ரசிகர்கள். ஆனால் அந்த சமயம் விஜய் ரசிகர்களின் பொறுமையையே தியேட்டரில் சோதித்த திரைப்படம் சுறா.

அஞ்சான் –  இந்த திரைப்படம் உண்மையில் நல்ல படம் தான். நல்ல வெற்றியை பெற வேண்டிய படம் தான். இப்போது ரசிகர்கள் பார்த்தாலும், நல்லாத்தானே இருக்கு ஏன் பிளாப் ஆனது என யோசிக்க வைக்கும் திரைப்படம். அதற்கு ஒரே காரணம் இயக்குனர் லிங்குசாமி இந்த படத்திற்கு கொடுத்த பில்டப். இது எப்படி இருக்கும் தெரியுமா என ஆரம்பித்தவர் படத்தை பற்றி அளவுக்கு அதிகமாக புகழ்ந்து கூற, டீசர் மிக பெரிய எதிர்பார்ப்பை கூட்டியது. ஆனால் படத்தில் இவர்கள் கொடுத்த பில்டப் அளவுக்கு கதை இல்லை அதனால் படம் தோல்வி.

இதையும் படியுங்களேன் – நான் எவளோ கஷ்டப்படுகிறேன் தெரியுமா.? ஆனால் ரஜினி..? இது கமலின் பாராட்டா.?! விமர்சனமா.?

விவேகம் – இந்த படத்தை சேர்க்காமல் விட்டால் மற்ற ரசிகர்கள் கோபித்து கொள்வார்கள். இந்த படத்தின் முதல் போஸ்டர் முதல், டீசர், ட்ரைலர், ஷூட்டிங் ஸ்பாட் புகைப்படங்கள் என என அனைத்தும் அஜித் ஹாலிவுட் லெவல் ஆக்சன் படத்தில் நடிக்கிறார் என்கிற பில்டப் கொடுத்து கடைசியில் இங்கிலிஷ் பேசும் வில்லன்களின் தமிழில் பன்ச் வசனம் பேச வைத்து , அஜித் நான் பேசினால் பன்ச் வசனம் மட்டுமே பேசுவேன் என படம் முழுக்க இருந்ததாலும் படம் தோல்வி அடைந்துவிட்டது.

Manikandan

முருகன், சினிரிப்போர்டஸ் தமிழ் இணையதளத்தில் கடந்த 8 ஆண்டுகளாக பணியாற்றி வருகிறார். ஊடகத்துறையில் 10 ஆண்டுகளுக்கு மேல் அனுபவம் கொண்டவர். இளங்கலை பட்டதாரியான இவர், வெப்துனியா தமிழ் இணையதளத்தில் 2016 ஆம் ஆண்டு பணியைத் தொடங்கினார். இந்த தளத்தில் சினிமா செய்திகளை வழங்கி வருகிறார். மேலும் இணையதள செய்தி ஆசிரியராகவும் பணியாற்றி வருகிறார்.