Cinema News
என்னமா.. இப்படி பண்றீங்களேமா.?! ‘அந்த’ வார்த்தை சொல்லி மொத்த பேரையும் திட்டிய லட்சுமி ராமகிருஷ்ணன்.!
லட்சுமி ராமகிருஷ்ணன், இவரை ஒரு நடிகையாக நமக்கு தெரியும் . பாஸ் என்கிற பாஸ்கரன், யுத்தம் செய் உள்ளிட்ட படங்களில் இவரை கவனித்து இருப்போம். அதனை விட அதிகமாக நம்மில் நிற்பது, சொல்வதெல்லம் உண்மை எனும் நிகழ்ச்சி மூலம் தான் பிரபலம் ஆனார்.
ஆனால், இவர் அதனையும் தாண்டி இவர் ஓர் இயக்குனர். அரோகணம் எனும் திரைப்படம் மூலம் இயக்குனரானவர், அதன் பிறகு, நெருங்கி வா முத்தமிடாதே, ஹவுஸ் ஓனர் , அம்மணி போன்ற படங்களை இயக்கியுள்ளார்.
இவர் தற்போது புதியதாக ஒரு படத்தை இயக்கி வருகிறார் அதன் ஷூட்டிங் சென்னையில் நடைபெற்று வருகிறது. வழக்கமாக ஷூட்டிங்கில் 1 மணிக்கு சாப்பாடு பிரேக் இருக்குமாம். அதனை இயக்குனர் கூறியதும் அனைவரும் சாப்பிட சென்று 2 மணிக்கு வருவராம்.
இதையும் படியுங்களேன் – குருபக்தியில ரஜினி, கமலையெல்லம் மிஞ்சிடுவார் போல விசே!…வியப்பூட்டிய புதிய தகவல்!…
அன்றைய தினம் அவர் எதோ ஒரு வேலையாக பிரேக் சொல்லாமல் 1.45 வரை ஷூட் செய்துவிட்டு கேரவன் சென்றுவிட்டார். உடனே அங்கிருந்தவர்கள் சாப்பிட ஆரம்பித்துள்ளனர். 10 நிமிடம் கழித்து வெளியே வந்த லட்சுமி ராமகிருஷ்ணன். அனைவரும் கோபத்தில் திட்டிவிட்டனராம்.
இதையும் படியுங்களேன் – முதலில் அஞ்சலி.. இப்போ குட்டி நயன்தாரா.! குறி வைத்து காத்திருக்கும் ‘அந்த’ இளம் நடிகர்.!
எல்லாரும் இங்க சாப்பிடவா வந்தீங்க. என கண்டபடி திட்டி, அதுவும் குறிப்பாக உதவி இயக்குனர்களை, நீங்கெல்லாம் மீசை வைச்சா ஆம்பிளங்களா என்றும் கண்டபடி திட்டிவிட்டாராம். இதனால் மொத்த படக்குழுவும் சாப்பிடாமல் எழுந்து போய்விட்டதாம். இதனை வலைப்பேச்சு யூடியூப் பக்கத்தில் தெரிவித்து இருந்தனர்.