விக்ரம் ரசிகர்களுக்கு இது ஒன்னும் புதுசில்ல… பெரிய எதிர்பார்ப்பு சுமார் வெற்றி… ஷாக்கிங் லிஸ்ட் இதோ…

Published on: August 31, 2022
---Advertisement---

நடிகர் விக்ரம்  நடித்த திரைப்படங்கள் எப்படி இருந்தாலும், அவருக்கான இடம் தமிழ் சினிமாவில் இதுவரையில் இருந்து கொண்டே இருக்கிறது , இருக்கும். அவருடைய கதை தேர்வு கொஞ்சம் தடுமாறினாலும், கதாபாத்திரத்திற்கான உழைப்பு யாராலும் மறுக்க முடியாது. அதுவும் அவர் இன்னும் உயர்ந்து கொண்டிருக்க காரணமாக இருக்கிறது. அப்படி அவர் கடுமையாக உழைத்தும், பலன் கொடுக்காத சில படங்களின் லிஸ்ட் இதோ…

கந்தசாமி – விக்ரம் நடிப்பில் அதிக எதிர்பார்ப்பை கூட்டிய திரைப்படம் என்றே இதனை கூறலாம். இதில் சூப்பர் ஹீரோ சியான் விக்ரம் என அடைமொழி எல்லாம் கொடுத்தார்கள். அன்றைய காலகட்டத்தில் பெரிய பட்ஜெட் திரைப்படம். ட்ரைலர், போஸ்டர் எல்லாம் பிரம்மிப்பூட்டியது. ஆனால் படத்தின் கதைக்களம், திரைக்கதை ரசிகர்களை பதம் பார்த்துவிட்டது.

ராவணன் – மணிரத்னம் இயக்கத்தில் படம் இப்போ சூப்பர், படத்தின் இசை தெரியுமா? காட்சியமைப்புகள் தெரியுமா என்றெல்லாம் கூற வேண்டாம். படம் வெளியான சமயத்தில் படத்தில் மெதுவாக இருந்த திரைக்கதை, விக்ரம் கதாபாத்திரத்தின் சரியான புரிதல் ரசிகர்கள் மத்தியில் இல்லாமை போன்ற விஷயங்கள் அப்படத்தை அப்போது தோல்வி படமாக மாற்றியது.

இதையும் படியுங்களேன்  –  நம்ம அட்லீ செஞ்ச வேலையால் அதிர்ந்து போன பாலிவுட்.! ஷாருக்கானுக்கு இப்போ வேற வழி இல்ல…

ஐ – ஷங்கர் இயக்கத்தில் விக்ரமின் அபரிமிதமான நடிப்பில், உழைப்பில் வெளியான இந்த திரைப்படம் வருவதற்கு முன்னர், எந்திரன் வசூலையெல்லாம் அசால்டாக அடித்துவிடும், இந்திய சினிமாவின் முக்கிய படமாக இருக்கும் என்றெல்லாம் கூறப்பட்டது. ஆனால் படம் ஒரு ஹை பட்ஜெட் விளம்பரம் என்று வெளியான பிறகு தான் தெரிந்தது.

இதையும் படியுங்களேன்  – அம்மா செண்டிமெண்ட்.. கணக்கு வாத்தி விக்ரம்.. அடுத்தடுத்த கொலைகள்… மிரட்டியதா கோப்ரா.?! முழு விமர்சனம் இதோ…

சாமி ஸ்கொயர் – சாமி படத்தின் வெற்றியை பற்றி சொல்லி தெரியவேண்டியதில்லை. அப்படத்தை இப்போது பார்த்தாலும் சலிக்காத ஓர் படம். ஆனால் அதனை மறக்கடிக்குக்ம் விதமாக வெளியான திரைப்படம் தான் சாமி ஸ்கொயர். சாமி படம் பார்க்கும் போதெல்லாம் , சாமி இரண்டாம் பாகம் வந்து நம்மை பயமுறுத்துகிறது. ஹரி – விக்ரம் கூட்டணியில் முதல் சறுக்கல் சாமி ஸ்கொயர்.

இதே போல, 10 எண்றதுக்குள்ள , கடாரம் கொண்டான் ஆகிய படங்களும் பெரிய பட்ஜெட் இல்லை என்றாலும் எதிர்பார்க்க வைத்து கொஞ்சம் ஏமாற்றத்தை கொடுத்தது.

Manikandan

முருகன், சினிரிப்போர்டஸ் தமிழ் இணையதளத்தில் கடந்த 8 ஆண்டுகளாக பணியாற்றி வருகிறார். ஊடகத்துறையில் 10 ஆண்டுகளுக்கு மேல் அனுபவம் கொண்டவர். இளங்கலை பட்டதாரியான இவர், வெப்துனியா தமிழ் இணையதளத்தில் 2016 ஆம் ஆண்டு பணியைத் தொடங்கினார். இந்த தளத்தில் சினிமா செய்திகளை வழங்கி வருகிறார். மேலும் இணையதள செய்தி ஆசிரியராகவும் பணியாற்றி வருகிறார்.