என் சொத்துக்கள் இந்த 3 பேருக்கு மட்டுமே! – உயில் எழுதிய நித்தியானந்தா

Published On: December 19, 2019
---Advertisement---

6649a167c0cdf81c221c1ca19792bfde

சிறுமிகள் கடத்தல், பாலியல் வன்கொடுமை, நில அபகரிப்புகள் ஆகியவற்றில் சிக்கியிருப்பவர் நித்தியானந்தா. ஆனால், இது தொடர்பான வழக்கில் அவரை போலீசார் தேடிய போது அவர் எங்கிருக்கிறார் என்பதையே அவர்களால் கண்டுபிடிக்க முடியவில்லை. நீதிமன்றத்திற்கும் அவர் வரவில்லை.

அதேநேரம், தென் அமெரிக்காவில் உள்ள ஈக்வாடர் அருகே ஒரு தீவை விலைக்கு வாங்கி அதை ‘கைலாஷ் நாடு’ என நித்தியானந்தா பிரகடனம் செய்தார். ஆனால், நித்யானந்தாவுக்கு அடைக்கலமோ அல்லது சொந்த நிலம் வாங்க அனுமதியோ கொடுக்கப்படவில்லை என ஈகுவடார் அரசு விளக்கம் அளித்துவிட்டது. எனவே, அவர் எங்கே இருக்கிறார் என்பதே தெரியவில்லை. அதேநேரம், தினமும் வீடியோ மூலம அவர் பரபரப்பான கருத்துகளை கூறி வருகிறார்.

தற்போது புதிதாக வெளியான வீடியோவில் அவர் கூறியதாவது:

நான் மரணமடைந்த பின் என் உடல் பெங்களூரில் உள்ள ஆசிரமத்தில் ஜீவ சமாதி செய்யப்பட வேண்டும். மக்கள் எனக்கு கொடுத்த நன்கொடை, அன்பளிப்பு .உள்ளிட்ட எனது அனைத்து சொத்துக்களும் திருவண்ணாமலை குரு பரம்பரை, மதுரை குரு பரம்பரை, காஞ்சி குரு பரம்பரை ஆகிய 3 பேருக்கு மட்டுமே சொந்த என நான் ஏற்கனவே உயில் எழுதிவிட்டேன்’ என அந்த வீடியோவில் பேசியுள்ளார்.

Leave a Comment