சமீபத்தில் உதயநிதியின் ரெட் ஜெயண்ட் மூவிஸின் 15 வருட நிறைவு விழாவை ஒட்டி பிரம்மாண்டமான விழா நடைபெற்றது. இந்த விழாவிற்கு தமிழ் சினிமாவின் முக்கிய நடிகர்கள் கலந்து கொள்ள தயாரிப்பாளர் போனிகபூர், இந்தி நடிகர் அமீர்கானும் கலந்து கொண்டனர். கமல், கார்த்தி, சிவகார்த்திகேயன்,விக்ரம், விஜய் சேதுபதி, விஷால், சூரி போன்ற பல நடிகர்கள், நடிகைகளும் கலந்து கொண்டு பேசினர்.

தமிழ் சினிமாவை பொறுத்தவரைக்கும் சமீபத்தில் ரிலீஸ் ஆகும் பெரும்பாலான படங்கள் ரெட் ஜெயண்ட் மூவிஸ் தான் வாங்குகிறது. அந்த பெருமை உதய நிதியை மட்டுமே சாரும்.அதற்காக அவரை மேடையில் வந்து பேசிய அனைவரும் பாராட்டினர். கடைசியில் பேசிய கமல் ஒரு புதிய அறிவிப்பை இந்த மேடையில் அறிவித்தார்.
இதையும் படிங்கள் : இவ்ளோ திறமை இருந்தும் பிரசாந்த் பிக் அப் ஆகாதது ஆச்சரியம் தான்..!!!

அவரது தயாரிப்பில் ராஜ் கமல் ஃபிலிம்ஸின் 54 படம் ஒரு உண்மை சம்பவத்தை மையமாக வைத்து எடுக்கப்போகிறார்களாம். அந்த படத்தில் உதயநிதி தான் ஹீரோவாக நடிக்கப்போகிறாராம். இந்த அறிவிப்பை கூறி மேலும் சில சம்பவத்தை கூறினார் கமல். உதய நிதி அரசியலுக்குள் வந்த பிறகு நடிக்கனுமா என அவரது தந்தையும் முதல்வருமான மு.க.ஸ்டாலின் கேட்டாராம்.

இதையும் படிங்கள் : கொஞ்ச நேரத்தில் தளபதி ரசிகர்களை அதிர வைத்த வரலட்சுமி.! விஜயின் புது லுக்.! வைரலாகும் புகைப்படங்கள்…
அதற்கு கமல் ஏன் நான் இல்லையா? என என்னை உதாரணம் காட்டி அவரிடம் கெஞ்சி உதயநிதியை மறுபடியும் இழுத்துள்ளேன் என கூறி உதயநிதியிடமும் தயவு செய்து நீங்கள் உங்கள் பொது சேவையை பார்த்துக் கொண்டாலும் உங்களின் கலைச்சேவையும் எங்களுக்கு தேவை. ஆகையால் இதை விட்டு விடாதீர்கள். இதை நான் கெஞ்சி கேட்கிறேன் என மேடையில் அனைவரின் முன்பு கேட்டுக் கொண்டார். விழாவிற்கு வந்த அனைவரும் கமல் இப்படியும் பேசுவாரா என ஆச்சரியத்துடன் பார்த்துக் கொண்டிருந்தனர்.
