விஜய் வீட்டில் திடீர் ரெய்டு: பின்னணியில் ரஜினியா?

Published on: February 5, 2020
---Advertisement---

03a44fbdf4c96cc0ba0d15026ed5b1e3

சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் அவர்கள் இன்று காலை செய்தியாளர்களை சந்தித்து சிஏஏ, என்.ஆர்.சி ஆகியவற்றுக்கு ஆதரவு தெரிவித்து பேட்டியளித்தார். இதனை அடுத்து எதிர்க்கட்சி தலைவர்கள் மற்றும் அரசியல்வாதிகள், அரசியல் விமர்சகர்கள், சமூக வலைதள பயனாளர்கள் அனைவரும் ரஜினிக்கு கடும் கண்டனத்தை தெரிவித்து வந்தனர்

இந்த நிலையில் ரஜினிக்கு எதிராக எழுந்து வரும் எதிர்ப்பு அலையை மறக்கவே திடீரென பிகில் தயாரிப்பாளர் வீட்டிலும் விஜய் வீட்டிலும் வருமான வரித் துறையினர் ரெய்டு நடத்தி வருவதாக அரசியல் வட்டாரங்கள் கருத்து தெரிவித்து வருகின்றன

இதன்படி தற்போது ரஜினி எதிர்ப்பு அலையை செய்தியை ஊடகங்கள் மறந்துவிட்டு உடனடியாக விஜய் செய்திக்கு முக்கியத்துவம் கொடுக்க ஆரம்பித்தனர். எனவே விஜய் வீட்டில் நடைபெறும் ரெய்டுக்கு ரஜினியும் ஒரு காரணம் என கருதப்படுகிறது 

ஒரு செய்தியை, ஒரு எதிர்ப்பை மறைக்க இன்னும் ஒரு பரபரப்பான செய்தியை ஆரம்பித்து விடுவது ஆட்சியாளர்களின் நோக்கமாக பல ஆண்டுகள் இருந்து வரும் நிலையில், அந்த தந்திரங்களில் ஒன்று தான் இந்த ஐடி ரெய்டு என்று கூறப்படுகிறது

Leave a Comment